பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. சீனிவாசன் O 125

தொழிலாகவும் நீடிக்கிறது. இந்தத் தொழிலில் ஈடு பட்டுள்ள தொழிலாளர்களின் பிரச்சனையும் மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

நான்காவதாக, இதர உலோகங்கள் சம்பந்தமான வேலை கள். இதில் முக்கியமாக பித்தளை, தாமிரம், வெண்

கலம், முதலிய பல வகை உலோகங்களைச் சார்ந்த தொழில்களாகும். உலோகக் கனிமங்களை எடுத்து உருக் குவது, உலோகக் கலவை செய்வது, இந்த உலோகங்

களிலிருந்து பலவகைப் பாத்திரங்கள் செய்வது இந்திய நாட்டின் பழைய முக்கிய கைத்தொழில்களில் ஒன்றாகும். இப்போது இந்த வகைப் பாத்திரங்கள் குறைந்து எவர் சில்வர் பாத்திரங்கள் அதிகமான புழக்கத்திற்கு வந்துள்ளது. எனினும் பாத்திரத்தொழில் முக்கிய தொழிலாகும். இந்தத் தொழில் சில சிறிய நடுத்தர நகரங்களிலும் உள்ளது.

ஐந்தாவதாக, தங்கம், வெள்ளி, தொடர்பான ஆபரணத் தொழில்: இதில் ஈடுபட்டுள்ள பொற் கொல்லர்க்கும் பிரச்சனை உள்ளது.

தங்கம் வெள்ளி ஆபரணங்கள் செய்யும் தொழில் இந்தியாவில் பண்டைக்காலம் தொட்டு மிகவும் புகழ் மிக்கதாகும். இந்திய நகைகள், ஆபரணங்கள் மிகவும்

கலைச்சிறப்பும், தொழில் நுட்பமும், நேர்த்தியும் நிறைந்தவை.

இன்று தங்கம், வெள்ளியின் விலை உயர்வாலும், மக்களின் ஏழ்மையாலும் இந்தத் தொழில் மிகவும் கடுமையாகபாதிக்கப்பட்டுள்ளது. இதில் ஈடுபட்டுள்ள

தொழிலாளர்கள் பெரும்பாலும் சிறிய பெரிய நகரங் களில் அதிகமாக உள்ளார்கள். இதில் ஈடுபட்டுள்ள தொழி லாளர் பழைய கிராமப்புற, கைவினைத் தொழிலாளர் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்னும் முறையில் ஐந்தொழில் தொழிலாளர்களையும் ஒன்று சேர்த்து, அமைப்பு ரீதியில் திரட்டுவது அவசியமானதாகும்.

5 மண்பாண்டம், செங்கல் உற்பத்தித் தொழிலாளர்கள்.

மண்பாண்டத் தொழில் நமது நாட்டின் முக்கியமான பண்டைய தொழில்களில் ஒன்றாகும். உலோகங்கள் பயன் பாட்டிற்கு வருவதற்கு முன்னர் மண் பாண்டங்கள்

உற்பத்தி மிகவும் பிரபலமாக இருந்தது.

சக்கரம் உலக வளர்ச்சியின் காலப் பயணத்தின் சின்ன மாகும்.

உருளையும், வண்டியும், ரதமும், தேரும், இன்றைய நவீன கால எந்திரங்களும் ஒடுவதும் செயல்படுவதும் சக்கரங்