பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 O கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.

கள் மூலமாகவே தான். அதனால் தான் படைத்தல் கடவுளின் பேராயுதமாக சக்கரத்தைக் கற்பித்து இந்திய மக்கள் மகிழ்ந்தார்கள்.

மண்பாண்டத் தொழிலின் மையம் சக்கரமாகும். மண் பாண்டத் தொழில் தோன்றியதும், மனித நாகரிக வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட மேல் கட்டமாகும்.

தண்ணிரும், உணவுப் பொருள்களும் சேமித்துவைக்கவும், சமையல் செய்வதற்கும், மண்பாண்டங்கள் பயன்படுத்தப் பட்டன. தாழிகளாகவும், குதிர்களாகவும் மண்பாண்டங் கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

மண்பாண்டங்கள் கிராமப்புற ஏழை எளிய மக்களின் பாத்திரங்களாக இன்னும் பெரும்பாலும் நீடிக்கின்றன. ஆயினும் தற்காலத்தில் பிளாஸ்டிக் பாத்திரங்களின் வர வால், மண்பாண்டங்களின் பயன்பாடு குறைந்து அந்தத் தொழிலுக்குப் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

அதே சமயத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களினால் கட்டிட வேலைகள் மிகுந்து செங்கல் ஒடு ஆகியவை களின் பாடு அதிகரித்துள்ளது. அதிகரித்துச் செங்கல் காள வாசல்கள் அதிகரித்து வந்துள்ளன.

மண்னை மூலப் பொருளாகக் கொண்டுள்ள இந்தத் தொழில்களில் ஈடுபட்டுள்ள பாட்டாளிகளின் பிரச்சனை களும் ஏராளம் உள்ளது. இவர்கள் பெரும்பாலும் கிராமங்களிலும் சிறு நகரங்களிலும் தான் வாழ்கிறார் கள்; தொழில் நடத்துகிறார்கள்.

இவர்களுக்கு அரசும் அரசு நிர்வாகங்களும் உதவி செய் வதற்குப் பதிலாக அதிகமாகத் தொல்லைகள் தான் கொடுக்கிறார்கள். மண்பாண்டங்களுக்கும் செங்கல் காள வாசல்களுக்கும் மண் எடுப்பதற்குக் கட்ட கட்டுப்பாடு, வரி, கட்டணம், அபராதம், வழக்கு, லஞ்சக் கொடுமை போன்றவை அண்மைக் காலத்தில் அதிகரித்து வருகின்றன.

இந்தப் பிரிவு பாட்டாளிகளுக்குள்ள பிரச்சனைகள், தொழில் பாதுகாப்பு, தொழிலாளர் நலன் ஆகியவை களில் கவனம் செலுத்துவது அவசியமாகும்.

ந்தப் பிரிவு பட்டாளிகளை அமைப்புப் பூர்வமாகத் திரட்டி அவர்கள் தங்கள் உரிமைகளைப் பெற, நலன் களைப் பாதுகாத்துக் கொள்ளப் பாடுபட வேண்டும்.

6 கட்டிடத் தொழிலாளர்கள்:

கட்டிடத் தொழில், கட்டுமானத் தொழில் நாட்டின்