பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 O கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி . .

நிர்வாகம் முதலியவைகளை ஏற்படுத் திக் கொண்டார்க ள். இங்கு ஆண்டான்களின் சமூகப் பொருளாதார அரசியல் நலன்கள் ஒரே மாதிரியாக இருப்பதால் ஆண்டான்களை ஒரு வர்க்கம் என்று குறிப்பிடுகிறோம். அதே போல் அந்த சமுதாயத்தின் அடிப்படை உழைக்கும் வர்க்கமாக இருந்த அடிமைகள் உழைப்பதற்கு மட்டுமே உரியவர்களே, உழைப் பிற்குரிய ஊதியம் ஆண்டான்களிடமிருந்து பெறுபவர் களாக, சொத்துக்களிலும் சுகவாழ்விலும் எந்தவிதப் பங்கும் இல்லாதவர்களாக, அரசில் ஆட்சி நிர்வாகத்தில் எந்தவிதப் பங்கும் பாத்திரமும் இல்லாதவர்களாக இருந்தார்கள்’ இப்படி அடிமைகளின் அரசியல் பொருளாதார சமுதாய நலன்களும் ஒரே மாதிரியாக இருந்ததால் அடிமை மக்களை ஒரு வர்க்கம் என்று குறிப்பிடுகிறோம்.

ஆண்டான்களுக்கும் அடிமைகளுக்குமிடையில் பிற்காலத்தில் உற்பத்தி உறவுகளில் மோதல்கள் ஏற்பட்டுப் போராட்டங் களும் நடை பெற்றிருக்கின்றன. இந்த இரு வர்க்கங்களுக் கிடையில் நடந்த போராட்டத்தை வர்க்கப் போராட்டம் என்று குறிப்பிடுகிறோம்.

வர்க்கப் போராட்டம் என்பது ஆரம்பத்தில் ஆண்டான்கள் தங்கள் பொருளாதார ஆதிக்கத்தை-அரசியல் ஆதிக்கத்தை உறுதிப் படுத்திக் கொள்வதற்காக அல்லது சாகுபடி, ஆடு மாடு மேய்த்தல் முதலிய தொழில்களில் அதிகமான உபரி யைப் பெறுவதற்காக, மற்றும் ஆண்டான்களுக்குத் தேவை யான வீடுகள் இதர வசதிகளைச் செய்து கொள்வதற்காக அடிமைகளை அதிகமாகக் கொடுமைப் படுத்திய போது அந்தக் கொடுமைகளுக்கு எதிராக நடந்துள்ள போராட்ட மாக இருந்திருக்கிறது. பின்னர் அடிமைகள் தங்கள் உரிமை கள் கேட்டும் போராட்டங்களும் நடந்திருக்கின்றன. இந்த வர்க்கப் போராட்டம் முற்றிய போது அடிமைகளின் பலம், உழைப்பு எண்ணிக்கை பலத்தின் காரணமாக ஆண் டான்களின் ஆதிக்க சமுதாயம் நிலை கொள்ள முடியாமல் தகர்ந்து விட்டது. ஆண்டான்களுக்கும் அடிமைகளுக்கும் பொது நாசம் ஏற்பட்டு புதிய சமூகப் பொருளாதார அமைப்புமுறை ஏற்பட்டிருக்கிறது.

அடிமைகளின் பலம் எண்ணிக்கையில் மட்டுமல்ல. அவர் களுடைய உழைப்பு சக்தியில் தான் அவர்களுடைய பலத் தின் ஆதாரம் அமைந்திருந்தது. அடிமைகள் உழைக்க மறுத் தால், அல்லது அவர்களுடைய உழைப்பில் ஊக்கம் குறைந் தால் சமுதாயத்தின் உற்பத்தி பாதிக்கப்பட்டு, சமுதாயமே சக்தியிழந்து அந்தக் கட்டிடத்தின் அஸ்திவாரம் பல வீனப்பட்டு தகர்ந்து விடுகிறது. எனவே ஆண்டான் அடிமை சமுதாயத்தில் ஏற்பட்ட வர்க்க மோதல்கள் அந்த சமுதாயக் கட்டமைப்பைத் தகர்த்து விட்டது. அதில் பழைய சமூகப் பொருளாதார அமைப்பு முறைகள் அழிந்து