பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. சீனிவாசன் 0 141

தொழில் அதிபர்கள் ஒரு வர்க்கம் என்ற முறையில் கங்களுடைய பொருளாதார அரசியல் நலன்களையும் கருத்தில் கொண்டு தலைமை தாங்கியிருக்கிறார்கள். பின்னர், அது - முதலாளிகளுக்கும் நிலப்பிரபுக்களுக்கும் ைெடயிலான போராட்ட மாகவும் வளர்ந்திருக்கிறது.

சில இடங்களில் நிலப் பிரபுக்களுக்கு எதிரான வர்க்கப் போராட்டம் சூட்டுக்கு மீறிய அளவில்போன போது அந்தப் ாேராட்டத்தின் தலைமையில் இருந்த முதலாளிகள் அந்த நாட்டு நிலப்பிரபுக்களுடன்) சிம்ரசமும் செய்து கொண்டார்கள். இருப்பினும் நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராக முதலாளி வர்க்கம் நடத்திய போராட்டத்தில் குடியானவர்களும் பண்ணையடிமைகளும் முழுமையாக ஈடுபட்_காரணத்தால், விவசாயிகள் பண்னையடிமை முறையிலிருந்து விடுதலை பெற்றார்கள்.

இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி முதலிய மேற்கு ஐரோப்பிய நாடுகளில் நிலப்பிரபுத்துவ முறை ஒழிந்த்து. நிலப்பிரபுக்களும், பண்ணையடிமைகளும் வர்க்கம் என்னும் முறையில் மறைந்தனர். பழைய வர்க்கங்கள் மறைந்து புதிய வர்க்கங்கள் தோன்றின.

நான்காவது கட்டத்தில் முதலாளித்துவ அமைப்பு தோன்றி யது. குறிப்பாக மேற்கு ஐரோப்பிய நாடுகளில், அமெரிக்க்ா வில் முதலாளித்துவ அமைப்பு முதலில் தோன்றியது. அதன் பின்னர் இதர ஐரோப்பிய நாடுகளிலும் ஜப்பானிலும் முதலாளித்துவ வளர்ச்சி ஏற்பட்டது. ஆங்கிலேயர்கள் குடி யேறிய கானடா ஆஸ்திரேலியா. நியூஜிலாந்து, முதலிய் நாடுகளிலும் முதலாளித்துவம் வளர்ச்சியடைந்தது.

முதலாளித்துவம் இந்த நூற்றாண்டின் தொடக்கத்திற்குள். உலகம் முழுவதிலும் தனது ஆதிக்கத்தைப் பரப்பி விட்டது.

முதலாளித்துவ அமைப்பில் புதிய வர்க்கங்கள் தோன்றின. அதில் முதலாளிகள், தொழிலாளர்கள் ஆகிய இருவர்க்கங் களும் அடிப்படை வர்க்கங்களாகும். முதலாளித்துவ .t(L1 , அமைப்பில் முதலாளிகளும்தொழிலாளர்களும் நேர்எதிரான வர்க்கங்களாகும். இவைகளுக் கிடையில் பல் வேறு இடைப் பட்ட நடுத்தர வர்க்கங்களும் தோன்றியிருக்கின்றன.

முதலாளித்துவம் தோன்றி, நிலப்பிரபுத்துவத்தை உறுதியாக எதிர்த்து நின்று போராடி. நிலப்பிரபுத்துவம் ஒழிக்கப்பட்டு முதல்ாளித்துவம் முழுமையாக வெற்றி பெற்ற நாடுகளில் முதலாளிகள் தொழிலாளர்கள் வர்க்க முகாம் பெரிதாகவும் இை ப்பட்ட வர்க்கங்களின் எண்ணிக்கை குறைவாகவும்

இருக்கிறது. o