பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 O கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி

விவசாயிகளின் மீது விழுகிறது. கடன் சுமையிலும் தனியாரிடம் தான் இவர்கள் அதிகம் சார்ந்திருப்பதால் வட்டிப் பளுவின் சுமையும் இவர்களுக்குச் சற்று அதிகம்.

இவைகளின் காரணமாகவே சிறு விவசாயிகள் வர்க்கத் தன்மைகளும், வர்க்க நலன்களும் சில தனிக் கூறுகளையும் கொண்டிருக்கின்றன.

மேலே கூறப்பட்டுள்ள மூன்று பிரிவுகளும்-அதாவது விவசாயத் தொழிலாளர்கள், ஏழை விவசாயிகள், சிறு விவ சாயிகள் ஆகியவர்கள்தான். கிராமப் புறங்களில் உள்ள விவசாயத் துறையில் வேலை செய்யக் கூடிய பாட்டாளி மக்களில் பெரும்பகுதியினராக உள்ளார்கள். நமது நாட்டின் மக்கள் தொகையில் ஏறத்தாழ /IDI L சதவீதம் மக்கள் இவர்களாகவே உள்ளனர்.

இவர்களோடு சேர்ந்து கிராமப்புறங்களில் உள்ள உதிரிப் பாட்டாளிகளும் கிராமப் புறங்களின் அடிப்படை வர்க் கங்களாக இருக்கின்றனர். இவர்களில் மிகப்பெரும்பாலோர் சமுதாய ரீதியில் தாழ்த்தப்பட்டவர்களாகவும் பிற்படுத்தப் பட்டவர்களாகவும் இருக்கிறார்கள்.

இந்த அடிப்படை வர்க்கங்களின் பிரச்சனைகளே நமது நாட்டின் அடிப்படை சமுதாயப் பிரச்சனைகளாக இருக் கின்றன. இந்த எழுபது சதவீதம் மக்களுக்கு அடிப்படைத் தேவைகளை-உணவு, உடை, வீடு, கல்வி ஆகிய ஆதாரத் தேவைகளைக் கொடுப்பது என்பது அரசின், சமுதாயத் தின், மிக முக்கியமான கடமையாகிறது.

5 கிராமப்புற உதிரிப் பாட்டாளிகள்

உதிரிப் பாட்டாளிகள் கிராமப்புறங்களிலும் இருக்கிறார்

கள். உதாரணமாகக் கைத்தறி நெசவாளர்கள், பீடித் தொழிலாளர்கள், கட்டிடத் தொழிலாளர்கள், ஐந் தொழில் தொழிலாளர்கள் முதலியவர்கள் தனித்

தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களாக கிராமப்புறங்களிலும் இருக்கிறார்கள்.

தென்னை, பனை மரத் தொழிலாளர்கள், தனித்தொழில் பிரிவாகப் பெரும்பாலும் கிராமப்புறங்களிலேயே வாழ்ந்து வருகிறார்கள்.

விவசாயத்துடன் இணைந்த கிராமப்புறப் பாட்டாளிகள் குறிப்பாக தச்சுப் பட்டறை, கொல்லுப் பட்டறை, மற்றும் விவசாய மக்களுடன் தொடர்பு கொண்ட சேவை