பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. சீனிவாசன் 0, 15 3

இவர்கள் விவசாயத் தொழிலாளர்களின் உழைப்பைச் சாண்டுவ துன் மூலமே தங்கள் விவசாய உற்பத்தியைச்

செப்து வருகிறார்கள்.

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இவர்களும்கூட சுதேசி மன்னர்கள், ஜமீன்தார்களின் நிலப்பிரபுத்துவ சுரண்டலுக்கு உட்பட்டவர்கள்தான். ஆனால் நாடு விடுதலை பெற்ற பிறகு சுதேசிமன்னர் முறையும் ஜமீன்தாரி முறையும் ஒழிக்கப்பட்டபிறகு, இப்போது நேரடியான நில உடமையாளர்களாக மாறிஉள்ளார்கள். பெரும்பாலும் நமது நாட்டில் இந்த பிரிவினர் தங்கள் விவசாயத்தை நவீனப்படுத்தியிருக்கிறார்கள் என்று கூறலாம். நவீன விவ சாயக்கருவிகள், ரசாயன உரம், பூச்சிமருந்து, நவீனரக வி ரி ய வி த் து க ள் முதலியவைகளைப் பயன்படுத்துவதில் இவர்கள் முதலிடம் வகிக்கிறார்கள். பசுமைப்புரட்சியின் பலன்களை இவர்கள் நன்குபெற்றார்கள் எனக்கூறலாம். இவர்கள் சிரிாமப்புறமக்கள் தொகையில் ஒருசிறியபகுதி தான் என்றாலும், சுமார் இருபது சதவீதத்திற்கு மேற்பட்ட விளைநிலம் இவர்கள் கையில் இருப்பதாக அரசு புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

நில உச்ச வரம்பு சட்டங்களால் இவர்களுடைய நிலவுடமை கட்டுப்படுத்தப்பட்டபோதிலும் இவர்கள் ஒரளவு நிலவுடமை யை தங்கள் கைக்குள் வைத்திருக்கிறார்கள் எனக் கூறலாம்.

கிராமப்புறங்களில் இவர்கள் இதரமக்கள் பகுதிகளில் செல் வாக்குள்ளவர்களாகவும் ஆளும் வர்க்கத்தின் அஸ்திவார மாகவும் இருக்கிறார்கள் என்று கூறலாம்.

இந்திய நாட்டின் முதல் மூன்று ஐந்தாண்டுத்திட்டகாலங் களில் இவர்களுடைய வளர்ச்சி குறிப்பிடத்தக்கதாக இருந்தது. ஆயினும் 1970ம் ஆண்டுகளின் தொடக்கத் லிெருந்து முதலாளித்துவ நெருக்கடியின் வளர்ச்சியை ஒட்டி ”” நிலையும் பாதிக்கப்படத் தொடங்கியிருக் கிறது என்று தெளிவாகக் கூறலாம். மிகவும் குறிப்பாக முதலாளித்துவ மார்க்கெட் பொருளாதாரம்தான் இவர் களையும் பெரிதும் பாதித்துள்ளது.

விவசாய உற்பத்தித் துறையிலும் இடுபொருள் விளை பொருள் விலையிலும் இவர்களும் நடுத்தர விவசாயிகளைப் போலவே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

வரி, வட்டி, கட்டணங்களினாலும், விவசாயக் கருவிகள், உாம். பூச்சி மருந்து ஆகியவற்றின் விலை உயர்வாலும், விவசாய விளை பொருள்களுக்குப் போதுமான விலை இல் வாத காம், இவர்களுக்கு விவசாயத் தொழில் லாபகர மா னதாக இல்லை. வேறு உபரி, துணை தொழில்கள்