பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 0 கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி .

செம்பரம்பாக்கம் ஏரி, தென்னேரி, மதுராந்தகம் ஏரி, வீராணம் ஏரி, வெலிங்டன் ஏரி, ராஜசிங்கமங்கலம் ஏரி, இராமநாதபுரம் பெரிய கண்மாய், மாடக்குளம் கண்மாய், மானுார்ஏரி முதலிய பெரிய பலஏரிகளும் ஏராளமான சிறிய நடுத்தர ஏரிகளும் குளங்களு கண்மாய்களும் தமிழ் நாட்டின் எல்லா மாவட்டங்களிலும் அமைந்துள்ளன.

இத்தகைய பாசன வசதிகள் மூலம் நெல், கரும்பு,வாழை வெற்றிலை, மஞ்சள், முதலிய பொருள்கள் சாகுபடி செய்யப் பட்டு வருகின்றன. இத்தகைய நஞ்சைப் பயிர்கள் தவிர, கேழ்வரகு, சோளம் கரும்பு, வரகு, பயறு வகைகள், வேர்க் கடலை, குச்சிக் கிழங்கு முதலிய புஞ்சை மற்றும் தோட்டப் பயிர்களும் சாகுபடிக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றன.

காய்கறிகள், கனிவகைகள், கிழங்கு வகைகளும் தோட்டப் பயிர்களாகச் சாகுபடி செய்யப்பட்டு வந்துள்ளன.

பருத்தியும் பட்டும் உற்பத்தி செய்யப்பட்டு நேர்த்தியான ஆடைகள் நெய்யப்பட்டு வருகின்றன.

நீர்ப்பாசன முறைகளில் கால்வாய், கண்மாய், கிணறு ஆகியவைகள் இந்திய விவசாயத்தில் வளர்ச்சி பெற்றுள்ளன.

இன்றைய வளர்ச்சியில் பெரிய அணைக்கட்டுகள் வந்துள் ளன. கிணற்றுப்பாசனத்தில் மின்சார பம்பு . செட்டுகள் வளர்ச்சி பெற்றுள்ளன.

இந்திய நாட்டின் விவசாய வளர்ச்சியில் நிலவளமும் நீர்வள மும் முக்திய பங்கு வகிக்கின்றன. ஆண்டுமுழுவதும்போது மான வெப்பம், இருபருவங்களிலும் மழை, வற்றாத ஆறுகள், ஆறுகளின் தண்ணிரைப் பாசனத்திற்குப் ப்யன் படுத்த கால்வாய். கண்மாய்களின் அமைப்பு முறை, நிலத்தடி நீரையும் பாசனத்திற்குப் பயன்படுத்தும் பழக்கம் ஆகியவை விவசாயத் துறையின் வளர்ச்சிக்கு உதவி யுளளன.

நிலவளம், நீர்வளம். தட்பவெப்ப நிலை ஆகியவைகளின் வசதிகளைக் கொண்டு ந்திய நாட்டின் விவசாயத் துறை மத்திய காலத்தில் மிகப் பெரிய அளவில் வளர்ச்சி பெற்றுள்ளது.

இயற்கை பாதிப்புகளான பெருவெள்ளம், பேய்க் காற்று, பகுவ மழை தவறுதல் முதலியன ஏற்பட்ட ஆண்டு கள் தவிர பாக்கி ஆண்டுகளில் பெரும்பாலும் விவசாய உற்பத்தியில் இந்திய நாடு உபரியாகவே இருந்திருக்கிறது.