பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 0 0 கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி

களைத் தவணை முறையில் செலுத்துவதற்கு உத்தா விட்டது.

கடன்களைத் தள்ளுபடி செய்வதற்கு விவசாயிகள் கேட்ட கோரிக்கைகளை அாக நிறைவேற்ற மறுத்து, சில பகுதி விவசாயிகளுக்கு கூடுதல் அபர் த வட்டியை ரத்து செய்தும், சிறிய விவசாயிகளின் சில பகுதியினருக்கு பாக்கிகளை ரத்து இசய்தும், சில பகுதி விவசாயிகளுக்கு கடன் திருப்பி செலுத்தும் தவணைகளை அதிகப் படுத்தியும் சில நிவாரண நடவடிக்கைகளை அரசு எடுத்தது.

விவசாயிகளின் விளை பொருள்களுக்குக் கட்டுபடியாகும் விலை பற்றி அரசு சரியான நடவடிக்கை எதுவும் எடுக்க வில்லை.

இந்த உயர் மட்டக் குழுவின் பரிந்துரைகளும், அரசாங்க நடவடிக்கைகளும் விவசாயிகளின் அடிப்படைப் பிரச்னை களுக்குத் தீர்வு காணவில்லை.

மின் கட்டண பாக்கியை விவசாயிகளால் கட்ட முடிய வில்லை. அதிமுக அரசு பெரும் ‘போலீஸ் படையைக் குவித்து விவசாயிகளை கிராமங்களிலிருந்து வெளியேற்றி

போலீஸ் ஆயுத பலத்துடன் மின் இணைப்புகளைத் துண்டிப்பது, கடன் வரி பாக்கிகளை வசூலிக்க ஜிப்தி

நடவடிக்கைகளை எடுப்பது போன்ற வன்முறைக் கொடுமை களை வஞ்சகமான முறையில் விவசாயிகளுக்கு எதிராக ஏவிவிட்டது.

இராமநாதபுரம் மாவட்டம், அண்ணா மாவட்டம், பெரியர்ா, திருச்சி, தென் ஆற்காடு மாவட்டங்கள் போன்ற பகுதிகளின் போலீஸ் மற்றும் அதிகாரிகளின் வன்முறைகள் துப்பாக்கிப் பிரயோகங்கள், தடியடிகள், பொய் வழக்குகள் போடப்பட்டு விவசாயிகள் அடக்கு முறைகளுக்கு ஆளாக்கப் பட்டனர்.

மக்களை சமாதானப் படுத்தும் வகையில் சில சீர்திருத்த அறிவிப்புகள், ஒன்றுபட்டுப் போராடும் விவசாயிகள் பகுதிகளைப் பிரித்து, அவர்களுடைய ஒத் துபையை உடைப்பது, விவசாயிகளைப் பிரித்து தனிமைப்படுத்தி அவர்கள் மீது அடக்கு முறையை ஏவிவிட்டு கொடுமைப் படுத்துவது, முக்கிய தலைவ1:களை சிறைப்படுத்தி விவசாயிகளின் உணர்வுகளை மழுங்கடிப்பது, விவசாயிகள் சங்கங்களையும், தலைமைகளையும வஞ்சகமாகப்பிரித்து சூழ்ச்சி செய்வது, போலியான சங்கங்களை உருவாக்கி அவைகளின் பிரதிநிதிகளை வைத்து சர்க்கார் உத்திரவு களுக்கும் திட்டங்களுக்கும் அவர்களுடைய ஒப்புதல் வாங்கி விவசாயிகளின் அமைப்புகளைப் பிரிப்பது, போன்ற