பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1O

விவசாயிகள் இயக்கமும் அமைப்பு நிலைப் பணிகளும் புதிய கடமைகளும்

இன்றைய கிராமப்புறப் பாட்டாளிகளின் எதிர்காலம், முதலாளித் துவப் பாதையின் வழியில் இல்லை. சோஷலிஸ்

திசை வழியில் தான் இருக்கிறது. அதற்கு கிராமப்புறப் பாட்டாளிகள் தயாராக வேண்டும்.

முதலில் கிராமப்புறப் பாடடாளிகளான விவசாயிசுள், விவசாயத் தொழிலாளர்கள், உதிரிப் பாட்டாளிகள் ஆகிய பிரிவுகளின் வர்க்க ஸ்தாபனங்கள் உருவாக்கப்பட

வேண்டும். அவை பலப்படுத்தப்பட வேண்டும்.

இரண்டாவதாக விவசாயிகளின், விவசாயத் தொழிலாளர் களின், கிராமப்புற உதிரிப் பாட்டாளிகளின் கோரிக்கை களைத் தொகுத்து அந்தக் கோரித்கைகளை நிறைவேற்றுவ தற்கான இயக்கத்தைத் தொடர்ச்சியாக நடத்த வேண்டும்.

மூன்றாவதாக கிராமப்புறப் பாட்டாளிகளின் எல்லாப் பிரிவுகளையும் சேர்த்து அவர்களுடைய பொது கோரிக்கை களுக்காகவும், கிராம பொது நலன்களுக்கான கே ாரிக்கை களையும் தொகுத்து, அவைகளை நிறைவேற்றுவதற்கான தனி இயக்கங்களையும் கூட்டு இயக்கங்களையும் நடத்த வேண்டும்.

நான்காவதாக, கிராமப்புறப் பாட்டாளிகளின் எல்லாப் பிரிவு மக்களையும் தேசீய சர்வ தேசீயப் பொதுப் பிரச்னை களில் ஒன்று திரட்டப் பாடுபட வேண்டும்.

ஐந்தாவதாக விவசாயிகளை, விவசாயத்_தொழிலாளர் கிளை, கிராமப்புற உதிரிப் பாட்டாளிகளின் நாட்டுப் பற்றையும் அரசியல் உணர்வு நிலையையும் உயர்த்தி சோஷலிஸ் திசை வழியில் நாட்டைத் திருப்புவதற்கான பொது இயக்கத்தில் கொண்டு வர வேண்டும்.