பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. சீனிவாசன் 0 175

ஆ, வது , இத்தகைய அமைப்பு நிலை மற்றும் இயக்கப் பணிகளில் முன் நின்று பணியாற்றும் தகுதியை உருவாக்க, கிராமப்புற இளைஞர்களுக்குப் பயிற்சி கொடுத்து, நாட்டிற்காகவும், நாட்டு மக்களுக்காகவும் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்ளக் கூடிய பல்லாயிரக் கணக்கான தொண்டர்களை செயல் வீரர்களை, ஊழியர் களை , உருவாக்க வேண்டும். அதற்கான பயிற்சி முகாம்கள், படிப்பு முகாம்கள் , தொடர்ச்சியாக நடத்துவதற்கான அமைப்புகளையும் உருவாக்க வேண்டும்.

இந்தக் கடமைகளைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

1. வர்க்க ஸ்தாபனங்கள் அமைப்பது பற்றி:

கிராமங்கள் தோறும் விவசாயிகளுக்கு விவசாயிகள் சங்கங் களும், விவசாயத் தொழிலாளர்களுக்கு விவசாயத் தொழி லாளர் சங்கங்களும், இதர கிராமப்புறப் பாட்டாளிகளுக்கு அவரவர்களுடைய தொழில்களின் அடிப்படையில் சங்கங் களும் அமைக்கவேண்டும்.

இப்போது சில இடங்களில் இவ்வாறு சங்கங்கள் இருக் கின்றன. சங்கங்கள் இல்லாத இடங்களில் சங்கங்களை உருவாக்க வேண்டும். இருக்கும் இடங்களில் அவைகளைப் பலப்படுத்த வேண்டும். முறையாக செயல்படுத்த வேண்டும். இப்போதெல்லாம் பல வேறு தலைமைகளிலும் கூட சங்கங் கள் உள்ளன. அரசியல் கட்சிகள் தலைமையிலும், சுயேச்சை யான முறையிலும் கூட சங்கங்களும் அணிகளும் இருக் கின்றன. அப்படிப்பட்ட இடங்களில் நமது சங்கங்களின் முன் முயற்சியில் கூட்டு நடவடிக்கைகளுக்கும் செயல்பாடு களுக்கும் நாம் முயற்சி எடுக்க வேண்டும். பாட்டாளி மக்களின் ஒற்றுமை என்பது நமது கொள்கையாக செயல் படுத்த வேண்டும். அது வெறும் உத்தியல்ல.

விவசாயிகள் சங்கங்களையும், விவசாயத் தொழிலாளர் சங்கங்களையும். கிராமப்புற உதிரிப் பாட்டாளிகளின் சங்கங்களை யும், விரிவான முறையிலான வர்க்க ஸ்தாபனங் களாக வளர்க்க வேண்டும். ஜனநாயக முறையில் செயல் படுத்த வேண்டும். தொடர்ச்சியான செயல்பாடுகளை

வளர்க்க வேண்டும். சங்க வேலைகளில் அதிகபட்சமாக அந்தந்த மக்கள் பிரிவினரைவும், அதில் குறிப்பாக இளைஞர் களையும், பெண்களையும் அதிகமாக சங்கப் பணிகளில் இயக்கங்களில் பங்கு கொள்ளச் செய்ய வேண்டும்.

ஒவ்வொரு கிராம சங்கமும் அந்தந்த அமைப்பின் அஸ்தி வாரமாகும். எனவே அந்த அடிப்படை அமைப்பு பல மடைந்தால்தான் , அல்லது பலமாக இருந்தால்தான்