பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 0 கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி . .

விவசாயத் தொழிலுடன் இணைத்து கால் நடை பராமரித் தல், ஆடு மாடு மேய்த்தல் நடை பெற்று வந்துள்ளன. ஆடு மாடு கோழி பன்றி முதலியவைகள் தனியான பண்ணை களாகவும் மந்தைகளாகவும், அத்துடன் ஒவ்வொரு குடும் பத்தின் துணைத் தொழிலாகவும் வளர்க்கப்பட்டு வநதுளளன.

மத்திய காலத்தில் விவசாயத்துறையுடன் சேர்ந்து இதர கிராமப் புறத்தொழில்கள் வளர்க்கப்பட்டுள்ளன.

உணவுப் பொருள் உற்பத்தி விவசாயத்தின் முக்கிய தொழி லாக இருந்த போதிலும், பருத்தி சாகுபடியும், மற்றும் சணல், அவுரி சாகுபடி, பட்டுப் பூச்சி வளர்த்த்ல் ஆகிய தொழில்கள் மூலம், நூலாடை, பட்டாடை, சணல் மூலம் கோணிகள், நார்கள் மூலம் கயிறுகள் அவுரி மூலம் சாயம் முதலிய முக்கிய தொழில்களும், இவைகளுடன் இணைந்த தச்சு வேலை, கொல்லு வேலை, கல் தச்சு முதலிய தொழில் களும் வளர்ச்சி பெற்றுள்ளன

கால்நடை வளர்ச்சியை ஒட்டி சில பகுதிகளில் குறிப் பாக கம்பளி நெய்தலும் தோல் தொழில்களும் பெரிய அளவில் வளர்ச்சி பெற்று இருந்தன.

இவ்வாறு மத்திய காலத்தில் இந்திய நாட்டின் விவசாயத் துறையின் வளர்ச்சி மக்களுக்குத் தேவையான உணவுப் பொருள் வழங்குவதாகவும், கிராமப்புறத் தொழில் களுக்குத் தேவையான மூலப் பொருள்களை வழங்குவ தாகவும் மேம்பாடு அடைந்து வந்திருக்கிறது.

இந்திய நாட்டின் இத்தகைய விவசாய வளர்ச்சியின்

மரபுகளை நாம் நன்கு கற்றறிந்து அவைகளின் பயன் பாட்டின் தொடர்ச்சியைப் பாதுகாக்க வேண்டும்.

நமது நீர் வளங்களை, நீர்நிலைகளை ஆறுகளை, குளங்

களை, ஏரிகளை, கண்மாய்களை, நிலத்தடி நீரைப் பாதுகாப்பதும் வளர்ப்பதும், அபிவிருத்தி செய்வதும் அவைகளைப் பராமரிப்பதும் மிகவும் அவசியமான பணிகளாகும்.

அத்துடன், நமது கால்வாய்கள், கண்மாய்கள், குளங்கள் ஏரிகளை நவீனப் படுத்துவது, புதிய பெரிய அணைகள், நீர்த் தேக்கங்கள் கட்டுவது, ஆறுகளை, நதிகளை இணைப் பது, பெரிய நீர்த்தேக்கங்களையும், ஆறுகளையும் சிறிய நீர் நிலைகளுடன் இணைப்பது, நிலத்தடி நீரைப்பாதுகாப் பது ஆகியவற்றில் நமது கவனம் திருப்பப்பட வேண்டும். மக்களுடைய உணர்வு நிலையை உயர்த்த வேண்டும்.