பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17.8 C கிராமப்புறப் பாட்டாளிகளை தோக்கி

இருப்பினும் தொழிற்சங்க அமைப்புகளின் இயக்க அனுபவத் ஆதயும், விவசாயிகள் இயக்க அனுபவத்தையும் விவசாயத் தொழிலாளர் சங்க இயக்க அனுபவத்தையும் வைத்துப் பார்க்கும்போது இந்த அடிமட்ட்வர்க்க ஸ்தாபன அமைப்பு தளை உருவாக்குவதிலும், அவைகளை ஜனநாயக முறையில் செயல் படுத்துவதிலும், அவைகளை உண்மையான வெகு ஜன இயக்கமாக வளர்ப்பதிலும் மிகவும் கடுமையான கஷ் டங்கள் இருக்கின்றன. இருப் பினும் இந்தக் கஷ்டங்களை கட்டாயம் சமாளித்து, அடிப்படை விர்க்க ஸ்தாப்னங்களை உருவாக்குவது மிகவும் அவசியமாகும். அதற்குக் குறுக்கு வழி கிடையாது. இது புரட்சிகர இயக்கத்தின் அடிப்படைக் கடமையாகும்.

இத்தகைய முக்கியமான கடமையை நிறைவேற்றுவதில் நமக்கு உள்ள மிகமுக்கியமான இவ.டயூறு நமது அடிப்படை வர்க்கங்களின் விவசாயிகள் தொழிலாளர்களின் பின்தங்கிய நிலையாகும் கல்விகலாச்சார வளர்ச்சியில் பின்தங்கியம் நிலையாகும். ஆயினும் நமது நாட்டுமககளுக்கு நமது பாரம் பரியப் பெருமையான மரபுவழிக்கலாச்சாரச் செழுமை கார னமாக நமது நாட்டு மக்களுக்கு மிகவும் உயர்ந்த அளவில் இபாது அறிவு இருக்கிறது. உயர்ந்த ம்ட்ட அனுபவ அறிவு இருக்கிறது. அது தமக்குரிய மிகப்பெரிய ச்ொத்தாகும். அதைப் பயன்படுத்தி நமது அடிப்படை அமைப்புகளை உரு வாக்க வேண்டும்.

தொழிலாளி விவசாயிகளின் அடிப்படை அமைப்புகளை உருவாக்குவதில் முக்கிய அம்சம், அதற்குரிய நிர்வாக ஊழி யர்களைப் பயிற்று விப்பதாகும். அத்துடன் மிகவும் அதிக மான அணு வில் பொறுமை விடாமுயற்சி தியாக உணர்வு அர்ப்பணிப்பு அவசியமாகும். அத்தகைய சிறந்த பண்புகள்ை 41ம் நமது இளைஞர்களுக்கிடையில் வளர்க்கவேண்டும்.

கிராமப்புறங்களில் வர்க்க அமைப்புகளை உருவாக்குவதில் இன்னும் அதிகமான கஷ்டங்கள் உள்ளன. இதில் உள்ள மற். மொரு முக்கிய இடையூறு சாதி அமைப்புகளும், சாதிவேறு பாட்டு பாகுபாட்டு உணர்வுகளுமாகும். நமது நாட்டின் தாதி மத அமைப்புகள் நமது நாட்டு மக்களின் ஒற்றுமைக்கு இடையூறுகளாக உள்ளன. சாதிப்பாகுபாடுகள்ையும் வேறு படுகளையும்-சாதிக்கொடுமைகளையும் எதிர்த்து நமது விவசாயிகள் இயக்கமும் விவசாயத் தொழில்ாள்ர் இயக்க மும் தொழிலாளர் இயக்கமும் மிகவும் கடுமையான முயற்சி களைச் செய்திருக்கின்றன.

நமது சமுதாயத் திங்குகளான சாதிப்பாகுபாடுகளையும் வேறுபாடுகளையும் கொடுமைகளையும் எ தி ர் த் து ப் போராடி அடித்தட்டு மக்களை ஒற்றுமைப்படுத்துவதில் | மது வர்க்க ஸ்தாபனங்களுக்கு மிக முக்கியமான கடமை

இருக்கிறது, பங்கு இருக்கிறது.