பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 0 கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி

விவசாயிகளுக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் விவ சாயத் தொழில் அடிப்படையான தொழிலாகும். அத்துடன் நிலத்துடன் தொடர்பு கொண்ட இதர பாட்டாளிகளின் நலன்களும் விவசாயத் தொழிலின் வளர்ச்சியுடன் இணைந்

திருக்கின்றன,

எனவே கிராமப்புறப் பாட்டாளிகளின், குறிப்பாக விவசாயி கள் விவசாயத் தொழிலாளர் சங்கங்களின் பிரச்னைகளும் கோரிக்கைகளும் ஒரளவு இணைந்ததாகும். அகில இந்திய விவசாயிகள் சங்கம் தொட்ங்கும்போது ஒரே அமைப்ப்ாகத் தான் தொடங்கியது. ஆனால் நாடு விடுதலை பெற்ற பின் னர் விவசாயத்துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை ஒட்டி விவசாயத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள் ளது. அவர்களுடைய சில நலன்களும் பிரச்னைகளும் தனி யாக வளர்ச்சி பெற்றிருக்கின்றன. அதனால் விவசாயத் தொழிலாளர் சங்கம், பாரதிய கேத் மஸ்துர் சங்கம் என்ற பெயரில் இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கமும் ஆரம் பிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அதனடிப்படையில் தமிழ் நாட்டிலும் மாநில அளவிலும், மாவட்டங்களிலும், கிராமப்புற மட்டம் வரையிலும் விவசாயத் தொழிலாளர் சங்கங்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன . எனவே விவசாயி கள், விவசாயத் தொழிலாளர்கள் ஆகியோர்களின் கோரிக் கைகளைப் பிரித்தும், இனைத்தும் பரிசீலனை செய்யலாம்.

விவசாயிகளின் அடிப்படையான பிரச்னைகளும் கோரிக்கைகளும்:

1. நிலம்: நாடு விடுதலை அடைந்து நாற்பது ஆண்டு களுக்கு மேல் கடந்து விட்ட போதிலும் இன்னும் சில இடங்களில் நிலக்குவியல் பிரச்னை திரவில்லை கோவில்கள், மடங்கள், அற நிலையங்கள் என்னும் பெயரிலும் இன்னும் பல நிலப்பிரபுக்களின் கைகளில் உச்ச வரம்புச் சட்ட்த்திற்கு மாறாக பினாமியாகவும் நிலம் இருந்து கொண்டிருக்கிறது. நாடு முழுவதிலும் இத்தகைய நிலத்தின் அளவு மொத்த விளை நிலத்தில் பதினைந்த முதல் இருபது சதவீதம் வரை இருக்கும். இந்த நிலம் இன்னும் வாரம், குத்தகை அடிப் படையில் மிகப் பெரும்பாலும் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் இன்னும் பல லட்சக்கணக்கான வாரம், குத்தகைக்கு சாகுபடி செய்யும் விவசாயிகள் இருக்கிறார்கள். இவர் களுக்கும் இவர்கள் சாகுபடி செய்யும் நிலத்தில் முழு உரிமை கிடைக்க வேண்டும்.

சாகுபடிக்கு லாயக்கான தரிசு புறம் போக்கு நிலங்கள் இன்னும் பல லட்சம் ஏக்கர் இருக்கிறது. அத்துடன் ஆற்றோரம், சாலையோரம், ரயில் பாதை ஒரங்களில் மாங்கள் வளர்ப்பதற்கு லாயக்கான தரிசு நிலங்களும் இருக் கின்றன. இவற்றையெல்லாம், சாகுபடிக்கும், மரங்கள்