பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. சீனிவாசன் O 181

வளர்ப்பதற்கும் நிலமில்லாத விவசாயிகளுக்குக் கொடுக்கப் படவேண்டும் சற்று விரிவான அளவில் சாகுபடிக்கு லாயக்கான இடம் குவிந்து இருந்தால் அந்த இடங்களில் சர்க்கார் பண்னைகளையோ, விவசாய சேவை நிலையப் பண்ணைகளையோ அமைக்கலாம்.

இத்தகைய நிலப்பிரச்னைக்கு ர்ேவு காண வேண்டியது மிகவும் அவசியமான, அவசரமான பிரச்னைகளில் ஒன்றா கும். சுதந்திர நாட்டில் இத்தகைய நிலப்பிரபுத்துவ திட்டு கிள் கரும்புள்ளிகளாகும் . . நாட்டின் வளர்ச்சிக்கு இடையூ றாக உள்ள சில தடைகளாகும். ஜனநாயகத்தின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு இடையூறானதாகும்.

ஏற்கெனவே இருந்த சுதேச மன்னராட்சி முறை, ஜமீன் தாரி முறை ஒழிக்கப்பட்டு, நில உச்ச வரம்புச் சட்டம் கொண்டு வரப்பட்டு பெரும் அளவில் நில விநியோகம் ஆகியுள்ளது. மேலும் நிலத்தில் நேரடியாக சாகுபடி செய்ய முடியாமலும், சாகுபடி வேலை கட்டுபடியாகா மலும்; கட்டுபடியாக சிறிய நில உடைமைகஜின நீடித்து வைத்துக் கொள்ளமுடியாமலும் நில மாற்றங்கள் ஏராள மாக ஏற்பட்டு வருகின்றன. இதனால் பல இடங்களில் பழங்குடி மக்களின் நிலம் பறி போயிருக்கிறது. ‘

எனவே நில உடமை எல்லா மாநிலங்களிலும் ஒரே சீராக அமைக்கவும், சிறு , நடுத் தர நில உடமைகளுக்குப் பாது காப்புக் கிடைக்கும் வகையில் சீரான நிலச்சீர்திருத்த முறை கள் கொண்டு வரப்பட வேண்டும்.

விவசாயத்தைத் தொழிலாக அறிவித்து பாதுகாப்புக் கிடைக்கச் செய்ய வேண்டும்.

2. நீர்ப்பாசனம்:

நமது நாட்டின் விவசாயத்தில் நீர்ப்பாசனம் மிக முக்கிய மான பிரச்னைகளில் ஒன்றாகும். இது பற்றி ஏராளமான கோரிக்கைகள் உள்ளன. நீர்த்தேக்கங்கள், அனைகள், பாசன ஏரிகள், குளங்கள், கண்மாய்கள், பாசனக் கிணறுகள், கால்வாய்கள் முதலியவை பற்றி ஏராளமான பல பிரச்னை கள் உள்ளன. இவை சம்பந்தமாக அந்தந்த கிராமத்தில் தனிப் பிரச்னைகளும் கோரிக்கைகளும் உள்ளன.

நமது நாட்டின் பொதுப் பணிந்துறை பழமை மிக்கதாகும். இவைகளுடன் நமது நாட்டின் நதிகளை இணைப்பதும் ஒரு பிரச்னையாக ஒரு முக்கிய கோரிக்கையாக எழுந் துள்ளது.

நமது நாட்டில் அவ்வப் போது ஏற்படும் பருவ நிலை மாற்றங்களும் நமது நீர்ப்பாசன நிலையுடன் இணைந்த