பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. சினிவாசன் 0 185

திட்டங்களை உருவாக்கி உள்ளது; சில இடங்களில் இத் தகைய கசிவு நீர்க்குட்டைகள் வெட்டப்பட்டிருக்கின்றன.

ஆனால் தமிழகத்தைப் பொறுத்தவரையில் ஏராளமான எண்ணிக்கையில், லட்சக்கணக்கில் என்று கூட கூறலாம், நீர் நிலைகள் இருக்கின்றன என்பதை நாம் ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளோம். தமிழ் நாட்டில் ஊர்தவறாமல் பல குள்ங்கள், ஊாணிகள், குட்டைகள், பொய்கை, - தடாகங்கள் உள்ளன. கோவில் தவறாமல் குளங்கள் உள்ளன. அத்துடன் பாசன ஏரிகள் குளங்கள் கண்மாய் அதன் உள்ள ன . அவைகள் எல்லாம் பாசனம், குடிநீர், குளிப்பதற்கு கால் தடைகள் குடிக்க, துரித்து பயன் படுவதுடன், சுற்றுப்பு சூழலைப் பாதுகாக்கவும்! நிலத்தடி ஊ ற் றுகளைப் பாதுகாக்கவும் பெருக்கவும் பயன்

படுகின்றன.

எனவே இந் த லட்சக்கணக்கான நீர் நிலைகளை ஆழப் படுத்தி பழுது பார்த்து பராமரிக்க ஒரு பெரிய விரி ‘வடைந்த திட்டத்தை தயாரித்து அதை நிறைவேற்ற வேண்டு: . நமது நீர்நிலைகளைப் பழைய நிலைக்கு

கொண்டு வருவதன்மூலம்தான் நிலத்தடி நீர் ஊற்று களைப் பாதுகாக்க முடியும்

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு ஏரி, குளம், கண்மாய் களுக்கும், ஊரணிகள், தெப்பக்குளங்களுக்கும் வரத்துக் கால் வடிகால்கள், மடைகள், கலுங்கு கள இருக்கின்றன. அவற்றில் பலவும் பாழடைந்துகிடக்கின்றன.அவையனைத் தையும் பழுது பார்த்து சீரமைக்க வேண்டும். இதில் மக்கள் ஒத்துழைப்பையும் நாடவேண்டும். சமுதாயத் தின் கூட்டு முயற்சிகளையும் பயன்படுத்தி நமது நீர் நிலை யிர்ப்பிக்க வேண்டும்.

3. கடன் :

விவசாயிகளின் கடன் பளு நீண்ட நெடுநாள் பிரச்சனை

யாக நீடித்து வருகிறது. இன்று கடன் வழங்கும் முறை களில் நவீன முறைகள் வளர்ச்சி பெற்றிருக்கின்றன.

முன் பெல்லாம் விவசாயிகளுக்கு தனியார் லேவாதேவிக் காரர்கள் மூலமாகத் தான் கடன் கிடைத்தது. அந்தத்தனி யார் கந்து வட்டிக்காரர்கள் கொடுமையான முறையில் வட்டி வாங்கிவந்தனர். இந்த கந்துவட்டிக்காரர்கள் விவசா யிகளுக்குக் கொடுமையான வட்டிக்குக்கடன் கொடுத்து, விவசாயிகளின் நிலத்தை அடமானமாகப் பெற்று கடைசி யில் கடனைத் திருப்பிக்கொடுக்க முடியாமல் விவசாயிகள் நிலத்தை இழந்திருக்கிறார்கள். இத்தகைய கொடுமையான வட்டியை எதிர்த்தும் இழந்த நிலத்தை மீண்டும் பெறுவதற்