பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 0 கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி

6. பயிர் பாதுகாப்பு :

பயிர் பாதுகாப்பிற்கு பூச்சி மருந்து அடிப்பது இப்போது முக்கியப் பழக்கமாக நடை முறைக்கு வந்திருக்கிறது.

பன்னாட்டு கூட்டு நிறுவனங்களும் பெரு முதலாளித்துவ உற்பத்தியாளர்களும் திட்டமிட்டு மருந்துகளின் தரத்தைக் குறைத்தும், விலையை உயர்த்தியும் மோசடி நடத்தி வரு கிறார்கள்.

மருந்துகளின் தரத்தை உயர்த்தவும், விலைகளைக் குறைக்க ைம் , சரியான மருந்துகள் கிடைக்கவும், ஏற்பாடுகள் வேண்டும். அத்துடன் பயிர் காப்பீட்டு (இன்ஷ-ரன்ஸ்) உதவிகள் உத்திரவாதப்படுத்த வேண்டும்.

7. விதைகள்:

விவசாய ஆராய்ச்சிப் பண்ணைகள் மூலம் புதிய பல ரக மான விதைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. நமது நாட்டின் ஆராய்ச்சிப் பண்ணைகள் விவசாயக் கல்லுரரிகள் பல்கலைக் கழகங்கள் மிகச் சிறந்த பணிகளை ஆற்றி வரு கின்றன. இந்த வகையில் நாம் பெரிய அளவில் சாதனைகள் புரிந்துள்ளோம். அதன் சாதனைகளின் பலன்களும் குறிப் பிட்ட அளவில் விவசாயிகளுக்குக் கிடைத்துள்ளன. நமது நவீன விவசாயப் பண்ணைகளின் சாதனைகள் விவசாயி களுக்கு அறிமுகமாவதற்கும், விவசாயிகளுக்கு அவைகளின் பலன்கள் கிடைப்பதற்கும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

மறுபக்கத்தில் பல்வேறு தானியங்கள், தவ தானியங்கள்

செடி, கொடி, புல், பூண்டு வகைகளில் பழைய பல ரகங்கள், இனக் கூறுகள் அழிந்து கொண்டிருக்கின்றன. இது மிகவும் அபாயகரமானதாகும். அதுவும் இயற்கைச் சூழல் சம நிலைத் தன்மையைப் பாதிக்கிறது. அத்துடன் பழைய தாவர உயிரினங்கள் அழிவது அபாயகரமானதாகும்.

--

நிலத்தின் தன்மையையும் பாதிக்கும்.

எனவே பழைய இனங்களைப் பாதுகாக்க வேண்டியதும் புதிய இனங்களை உருவாக்க வேண்டியதும், அவைகளை இணைந்து செய்ய வேண்டியதும் நமது ஆராய்ச்சி நிலையங் களின் கடமையாகும்.

o விவசாயிகளின் விளை பொருளுக்குக் கட்டுப் படியாகும்

πΡ 6ύ :

விளை பெருளுக்கு விலை என்பதுதான் விவசாயிகள்

சம்பந்தப்பட்ட மிக முக்கியமான பிரச்சனையாகும்.