பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 8 C கிராமப்புறப் பாட்டா சிகளை நோக்கி

தல் முதலிய பல வகைத் தொழில்களுக்கும் மாடுகளை நாம் பயன்படுத்துகிறோம். எனவே மாட்டு சக்தி நமது நாட்டு விவசாயத்தில் மிக முக்கியமான உற்பத்தி சக்தியாகும்.

கால் நடைகளைப் பராமரிப்பதில் அரசிற்கு முக்கிய கடமை இருக்கிறது. இதில் விவசாயிகளின் நலன்களைப் பாது காக்க விவசாயிகள் சங்கங்கள் முன் வர வேண்டும்.

10 காடு வளர்த்தல் :

காடு வளர்த்தல். மரம் வளர்த்தல் இயற்கைச் சூழலைப் பாது காத்தல் என்பது பொதுப் பிரச்சனை என்றாலும், விவசாயத்துடன் மிகவும் நெருக்கமானதாகும். தோட்டம் வளர்த்தல் விவசாயத்தின் ஒரு பகுதியாகும். பழமரங்கள் வளர்த்தல், தளைகளுக்கும், விவசாயக் கருவிகளுக்கும் அவசியமான மரங்களை வளர்த்தல் விவசாயத்துறையின் ஒரு பகுதியாகும். இதில் விவசாயிகளுக்கு உதவி செய்ய ஊக்கமூட்ட, அரசு ஆவன செய்ய, மக்களுடைய முன் முயற்சிகளை ஊக்குவிக்க விவசாயிகள் சங்கங்கள் உரிய கோரிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

11 srfl :

வரிக் கொடுமை விவசாயிகளை தொடர்ந்து பாதிக்கும் ஒரு கொடுமையாகும், நிலவரி இப்போதெல்லாம்

செஸ்லாடன் சேர்த்து இருமடங்குக்குமேல உயர்த்தப்பட்டு விட்டது. பல கிராமங்களில் வரிபாக்கிகள் வட்டியுடன் சேர்த்து விவசாயிகளின் கழுத்துக்குச் சுருக்காக வந்து கொண்டிருக்கிறது.

அதனால் அரசுக்கு பெரிய பாதிப்பு எதுவும் ஏற்பட்டு விடாது. மேலும் இந்த வரிகளை வசூலிப்பதற்கு அரசிற்கு வரிவருவாய் அளவுக்கு செலவும் ஆகிறது . எனவே நில வரியை முற்றிலுமாக ரத்து செய்யவேண்டும் என்னும் கோரிக்கையை படிப்படியாகக் கொண்டு வரலாம்.

நில வரியை முழுமையாக ரத்து செய்து விட்டாலும்

அதற்கு முன்பாக, வரிபாக்கிகளைத் தள்ளுபடி செய்ய வேண்டும். வரி வசூலிப்பதில் வன் முறைகள் கட்டாயமாக நிறுத்தப்பட வேண்டும். செஸ்களை நிறுத்த வேண்டும்.

தவறான முறையில் வரிவிதிப்பு செய்வதை நிறுத்த வேண்டும். ஜப்திகள் தடை செய்யப்பட வேண்டும் என்னும் கோரிக்கைகளை முன் வைக்க வேண்டும்.

12. விவசாய சேவை நிலயங்கள்:

ஒவ்வொரு பிளாக்கிலும் அரசுத்துறையில்விவசாயப்பண்ணை