பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. 5 T8:r O I 9 1

கள், கால்நடைப்பண்ணைகள் அமைக்கப்படவேண்டும். அவைகள் விவசாயிகளுக்கு முன்னுதாரணமாக அமைய வேண்டும். அந்தப்பண்ண்ைகளில் விவசாயிகளுக்கு வேண் டிய உழவு கருவிகள், உரம், பூச்சிமருந்து, உரம் தெளிக் கும் வேலைக்குழுக்கள், மருந்து தெளிக்கும் பணிக்குழுக்கள் டிராக்டர், டெம்போ, நவீன விதைகள், ஆராய்ச்சிப் பிரிவு கன், பயிற்சிப் பிரிவுகள் கொண்டதாக அந்த சேவைப் பண்ணைகள் அமைக்கப்பட வேண்டும்.

அந்த விவசாயப் பண்ணையை சுற்றிலும் உள்ள கிராமங் களில் உள்ள விவசாயிகள், அந்த அரசுப்பண்ணையில் தங்கள் பெயரை நிலத்தின் அளவைப்பதிவு செய்து கொள்ள வேண் டும். அந்த விவசாயிக்குத் தேவையான உழவு வேலைகள், உரமிடுதல், பூச்சி மருந்து தெளித்தல் முதலிய வேலைகளை விவசாய சேவையாக் அந்த அரசுப்பண்ணை செய்ய வேண் டும். அறுவடையின் போது அந்த சேவைக்குரிய கட்டணங் களை தான்யமாகவோ, பொருளாகவோ பணமாகவோ விவசாயிகள் கட்டிவிடலாம்.

விவசாயிகளின் விளை பொருளுக்குக் கட்டுபடியாகும் விலை நிர்ணயம் செய்து இந்த சேவை நிலையங்களே விளை பொருள்களை வாங்கிக் கொள்ளலாம்,

து o

இத்தகைய சேவை, நிலையங்கள் மூலம் விவசாயிகளுக்கு உழி,ை உரமிடுதல், பூச்சிமருந்து தெளித்தல், அறுவடை முதலிய வேலைகளில் செலவு குறையும். வேலை எளிதாகும் உரிய கட்டணங்களைச் செலுத்தி விடலாம். காலத்தில் வேலைகளை முடிக்கலாம்.

இத்தகைய அரசுத்துறை விவசாய சேவை நிலையங்கள் கிட்டுப்பண்ணை முறைக்கு முதல் கட்டமாக அமையும், இத்தகைய அரசுத்துறை விவசாயசேவை நிலையங்களைக் கொண்டுவர, மத்திய மாநில அரசுகள் அவ்வளவு சுலபமாக ஏற்காது. சோஷலிஸ் திசை வழியில் இத்தகைய முறைகள் நடைமுறைக்கு வரும். இருப்பினும் இக்கருத்துக்களை விவ சாயிகளிடம் எடுத்துக்கூறி, விவசாயசங்க கோரிக்கைமாநாடு களில் வைத்து விவசாயிகள் மற்றும், கிராமப்புற மக்களின் கருத்துக்களைத் திரட்ட வேண்டும். இத்துறையில் தனியார் சேவை நிலையங்களையும் ஊக்குவிக்கலாம்.

13. விவசாயத் தொழிலாளர்களின் அடிப்படையான

கோரிக்கைகளும் பிரச்சனைகளும்:

விவசாயத்தொழிலாளர்களிள் அடிப்படையா னகோரிக்கை,

-- m --- *** L. -- பிரச்சனைகள் பற்றி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் (பாரதிய கேத் மஸ்துார் சங்கம்) முன்வைத்திருக்

கிறது.