பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 ( கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி

மீன்பிடித் துறைமுகங்கள் நிறுவுதல், விசைப் படகு முதலியவை பற்றிய தனிப் பிரச்சனைகள் இருக்கின்றன.

கைத்தறி நெசவுத் தொழிலாளர்களுக்கு, நூல் விலை, கூலி உற்பத்திக் கருவிகள், துணி விற்பனை முதலியவை பற்றிய

பிரச்சனைகள் உள்ளன.

தென்னை, பனை மரத் தொழிலாளர்களுக்கு தொழில் பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு முதலிய பிரச்னைகள் உள்ளன.

இதே போல, கட்டிடத் தொழிலாளர்கள், ஐந்தொழில் தொழிலாளர்கள், மண்டாண்டத் தொழிலாளர்கள் முதலிய பல்வேறு பிரிவு தொழிலாளர்களுக்கும் தனிப் பிரச்சனை களும் பொதுப் பிரச்சனைகளும் இருக்கின்றன.

அந்தந்த தொழிலாளர் பிரிவுக்குரிய சங்கங்கள் தங்கள் பேரவைக் கூட்டங்களில் தொழில் மற்றும் வேலை பற்றிய பல்வேறு பிரச்சனைகளையும் விவாதித்து, தொகுத்து அந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை மேற் கொள்ள வேண்டும்.இயக்கங்களை நடத்த வேண்டும்.

3. பொதுக் கோரிக்கைகள்:

விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், இதர கிராமப் புறப் பாட்டாளிகளின் தனித்தனியான கோரிக்கைகளும் கிராமத்தின் பொது கோரிக்கைகளுக்காகவும் சங்கங்கள் இயக்கங்கள் நடத்தத் தயாராக வேண்டும்.

குறிப்பாக, அத்தியாவசியப் பண்டங்களான அரிசி, துணி, சர்க்கரை, மண்ணெண்ணெய், சமையல் எண்ணெய் மருந்து முதலிய பொருள்கள் நியாயமான விலையில் பொது விநியோகத்தின் மூலம் கிராம மக்கள் அனைவருக்கும் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். ஏற்கெனவே சில இடங்களில் பொது விநியோகக் கடைகள் இருக்கின்றன. அந்தக் கடைகள் போதுமானவைகளாக இல்லை, அவற்றில்

பண்டங்கள் சீராக விநியோகம் செய்யப்படவில்லை. போதுமான அரிசி, துணி மற்றும் இதர பொருள்கள் கொடுக்கப்படுவதில்லை. எடை குறைவு. காலத்தில்

கொடுப்பதில்லை. முதலிய முறை கேடுகளும் புகார்களும் இருக்கின்றன. இந்தக் குறைகளை எதிர்த்துப் போதுமான கடைகள், போதுமான பொருள்கள் சீரான விநியோகம் ஆகியவைகளுக்காக முயற்சிக்க வேண்டும்.

அதே போல் குடி தண்ணிர், சுகாதார வசதி, வைத்திய வசதி, கிராமப் பஞ்சாயத்துப் பிரச்சனைகள், வரி, பஸ் கட்டணம் மற்றும் பஸ் போக்குவரத்து வசதிகள், கல்வி வசதி குறிப்பாக ஆரம்பக் கல்வி வசதிகள், பொது