பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 O கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி

நிதித்துவம் கொடுக்கப் பட்டது. இந்த ஒ துக்கீடு இருபது ஆண்டுகளுக்கு என்று கூறப்பட்டது. இன்னும் போதுமான முன்னேற்றம் இல்லாத காரணத்தால் இந்த ஒதுக்கீட்டுக் காலம் மேலும் # கிறது.

இதற்கிடையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் அர சாங்க உத்தியோகங்களில் இட ஒதுக்கீடு வேண்டும் என்னும் கோரிக்கை எழுந்தது.

1977-ம் ஆண்டு இது பற்றி விசாரணை நடத்தி பரிந்துரை செய்யுமாறு திரு: மண்டல் என்பவர் தலைமையில் ஒரு கு

அமைக்கப்பட்டது. அதற்கு மண்டல் குழு என்று பெயர். அக்குழு பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசுப் பணிகளில் 27 சதம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்தது.

இந்த அறிக்கையை 1980-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த இந்திராகாந்தி அரசு கிடப்பில் போட்டுவிட்டது. 1985-ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த ராஜீவ்காந்தி அரசும் மண்டல்குழு அறிக்கை பரிந்துரையை அமலாக்கவில்லை.

1989-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த வி. பி. சிங் தலைமை யிலான அரசு 1990-ம் ஆண்டில் மண்டல் குழு பரிந்து ரையை அமுலாக்க உத்தரவிட்டது.

அப்போது சில மேல் சாதிகளைச்சேர்ந்த ஆதிக்க சக்திகளும் முதல் வகுப்பு அதிகாரிகளின் கூட்டத்தில் உள்ள ஆதிக்க சக்திகளும் சேர்ந்து கூட்டாகச்சதிசெய்து இட ஒதுக்கீட்டு உத்தரவுக்கு எதிராக வட மாநிலங்கள் சிலவற்றில் கலகம் செய்தார்கள்.

பாரதீய ஜனதாக்கட்சியின் தலைவர் எல். கே. அத்வானி தலைமை மக்களுடைய கவனத்தை திசை திருப்புவதற்காக, ராம ஜன்ம பூமி பிரச்சனையை தீவிரப்படுத்தி ராமருக்கு கோவில் கட்ட வேண்டும். என்று ரதயாத்திரை, கார் சேவை, செங்கல் சேகரிப்பு இயக்கத்தைத் தொடங்கினர்.

குஜராத்தில் தொடங்கப்பட்ட ரதயாத்திரை பீகாருக்கு வந்தடைந்தது. ராம ஜன்ம பூமி பாப்ரிமஸ்ஜீத் பிரச்சனை காரணமாக பதட்ட நிலை இந்து முஸ்லிம் வகுப்பு மோதல் அபாயம் ஏற்பட்டது. பீகார் மாநிலத்தில் பாரதீய ஜனதாக் கட்சித்தலைவர் கைதுசெய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து பாரதீய ஜனதாக்க அசி வி. பி. சிங் அமைச்சரவைக்குக் கொடுத்த ஆதரவை விலக்கிக் கொண்டது. பாராளுமன்றத் தில் முதலாவது பெரிய அரசியல் கட்சியாக உள்ள இ. காங் கிரஸ் கட்சி தனது அரசியல் சூழ்ச்சி மூலம் ஜனதா கட்சியில் உள்ள கருத்து வேற்றுமை பதவி ஆசைகளைப் பயன்படுத்தி அக்கட்சியைப் பிளந்தது . வி. பி. சிங் அமைச்சரவை பெரும் பான்மை இழந்து 1990 நவம்பர் 7-ம்தேதி ஆட்சிப்பொறுப்