பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. சீனிவாசன் O 219

நேரத்தில் ஒரே எடுப்பில் அரசியல் சட்டத்தை எழுதி அந்த ஆங்கிலேயன் முகத்தில் வீசினார்கள். தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள். மீனவர்கள் துடுப்புகளைத் தூக்கினார்கள். விவசாயிகள் தங்கள் நுகத்தடிகளையும் முளைக்கம்புகளையும் தூக்கினார்கள், அறவழியில் நின்ற சான்றோர்கள் காந்திவழியில் அகிம்சா போராட்டங்களை நடத்தினார்கள்.

இந்தியர்கள் அமைதியானவர்கள். அசைவில்லாதவர்கள், அடிமைப்புத்தியுள்ளவர்கள், எழுச்சியில்லாதவர்கள், ஏழ்மை மிக்கவர்கள், துாக்கம் நிறைந்தவர்கள், சுறுசுறுப்பு இல்லாதவர்கள் என்றெல்லாம். ஐரோப்பிய எழுத்தாளர் கிள் சிலர் நூல் எழுதிக் கேலி செய்தார்கள்.

ஆனால் நமது நாட்டு மக்கள் , தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வும், தர்மம் மீண்டும் வெல்லும், இன்று கட்டுண் டோம் பொறுத்திருப்போம் காலம் வரும். அப்போது எங்கள் காண்டிபம் பதில் சொல்லும் என்று எழுச்சி பெற்று அந்நிய ஆட்சியைத் துரத்தினார்கள்.

நாடு விடுதலைபெற்ற பின்னர் ஒவ்வொரு பத்தாண்டிலும் ஒரு அரசியல் மாற்றத்தைக் கண்டிருக்கிறது; நமது பாரத நாடு.

எனவே இன்றைய முதலாளித்துவ சுரண்டல் முறையும் பன்னாட்டு கூட்டு நிறுவனங்களின் கொட்டமும், கறுப்புப் பணத்தின் கடத்தல் பணத்தின் ஊழல்களும் சூதாட்டங் களும் நீண்ட நாள் நீடிக்காது. பிக்பாக்கெட் திருடர்களும், கொள்ளைக் கூட்டத்தலைவர்களும் நாட்டை நீண்ட நாள் ஆள முடியாது.

இன்றைய தொழிலாளர்களின் வேலை நிறுத்தங்களும்

பாராட்டங்களும் திகரித்து குகின்றன. கிராமப் G3 ஆகளும அதிகரித்து வருகின்ற இ L-1 TD

மக்கள், பழங்குடி மக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், கலைஞர்கள், பட்டதாரிகள், வழக்கறிஞர்கள் . டாக்டர் கள், பேராசிரியர்கள், தொழிலாளர்கள், சிறுதொழில்

முனைவோர்கள், தொழில் வினைஞர்கள், இப்படி சமுதாயத் தின் பல பகுதி மக்களும் தங்கள் உரிமைகளை கோரிக்கை களைக் கேட்டுத் தெருவிற்குவருகிறார்கள். மறியல் நடத்து கிறார்கள், உண்ணாவிரதங்கள் இருக்கிறார்கள். சாலை களை மறிக்கிறார்கள். சிறைகளை நிரப்புகிறார்கள். ஆட்சி யாளர்களின் பொய்யும் ஏமாற்றும் மக்களை ஏமாற்ற முடியவில்லை.

பாரத மக்களின் காலப் பயணம் தொடருகிறது. இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கம் முன்னுக்கு வரத் தொடங்கியிருக் கிறது.