பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. சீனிவாசன் O 29

தாரர்கள் ஒவ்வொரு ம காணத்திலும் மாவட்டக் கலெக்டர்களின் மேல் பார்வையில் இருந்தார்கள். இந்த மீன்தாரர்களுக்கு நிலவரியை நிர்ணயித்து அதை வசூல் செய்வதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டிருந்தது. தங்களுக் ச் சொந்தமாக உள்ள ஜமீனின் எல்லைக்குட்பட்ட $ விவசாயிகளிடம் வரிவசூலித்துக் கொண்டு, அதில் ஒரு தொகையை பேஷ்கவி, தொகை என்னும் பெயரில் சர்க்காருக்குச் செலுத்தினார்கள்.

இந்த ஜமீன்தாரர்களுக்கு அவர்களுடைய எல்லைக்குட் பட்ட கிராமங்களில் நிலத்தில் சாகுபடி செய்து வந்த விவசாயிகளிடம் வரிவசூலிக்கும் அதிகாரம் தவிர வேறு அதிகாரம் இல்லா விட்டாலும், அவர்கள் நடைமுறையில் தங்கள் ஜமீன் பகுதிகளின் அரசர்களைப் போல, அவர் களை எது செய்தாலும் தட்டிக் கேட்க ஆளில்லாமல் எதேச்சாதிகாரமாகவே தண்டல் நடத்திக்கொண்டிருந்தார் கள்.விவசாயிகளுக்குத் தாங்கள்செலுத்தும் வரிப்பணத்திற்கு எந்த வித நன்மையும் கிடைக்கவில்லை. இந்த ஜமீன் பகுதி களிலும் நீர்ப்பாசான நிலைகள் சரியாகப் பராமரிக்கப் படாமல் பாழாகிக் கொண்டிருந்தன. இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டு, உற்பத்தி குறைந்து படிப்படியாக விவசாயி களின் வாழ்க்கை நிலை கீழே போய்க்கொண்டிருந்தது.

சுதேசி மன்னர்கள், ஜமீன்தார்கள் ஆகியோர், பிரிட்டிஷ்

ட்சியாளர்களால் உண்டாக்கப்பட்ட புதிய வகையான இந்திய நிலப்பிரபுக்களாவர். இவர்கள் விவசாயிகள் மீது கடுமையாகவரி விதித்து, கொடுமையான முறைகளைக் கையாண்டு வரி வசூலித்தார்கள். அத்துடன் விவசாயிகளை பல்வேறு முறைகளிலும் கொடுமைப்படுத்தி அதிகாரம் செலுத்தினார்கள்.

சாதாரண மக்களிடம் பல்வேறு முறையிலான இனாம்களை வசூலித்தார்கள். ஜமீன்தார்களும், மன்னர்களுடைய ஆட் களும் மக்களைக் கொடுமைப்படுத்தினார்கள். அத்துடன் விவசாய உற்பத்திக்கும் அதன் வளர்ச்சிக்கும் இந்த நிலப் பிரபுக்களால் எந்த வித பலனும் இல்லை. மாறாக இவர் களுடைய ஆடம்பரம், ஊதாரிச் செலவுகள் எல்லாம் சமுதாயத்தின் மீது பினச்சுமையாக அமைந்தன.

அ.கி.துடன் இவர்கள் அந்நிய ஆட்சியின் அடியாட்களாக இருந்து மக்களை அடக்கி ஆளும் கொடுமைக்காரர்களாக ம்ெ, சுரண்டல்காரர்களாகவும் இருந்தார்கள்.

மூன்றாவதாக, சுதேசி மன்னர்களின்_ஆட்சி, ஜமீன் பகுதி _i போக பாக்கியுள்ள பகுதி கிராமங்கள் பிரிட்டிஷ் |ந்திய ஆட்சியின் நேரடி நிர்வாகத்தின் கீழ் இருந்தது. தயகு பயத்து வாரி முறை என்று பெயர், ரயத்துவாரி முறையில் விவசாயிகளுக்கு அவர்களுடைய நிலத்திற்கு