பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 0 கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.

நைஸ்ரகப் பருத்தி சாகுபடியாகும் நிலத்திற்கு அதிக வரி களைப் போட்டார்கள். உழவு மாடுகளுக்கும், கலப்பைக்கும் (மேக்காலுக்கு) (நுகத்தடி) வண்டிகளுக்கும் வரி போட்டார் கள்.

வ்வாறு விவசாயிகளுக்கும் விவசாய உற்பத்திக்கும் நிலத்

நிற்கும் விவசாயக்கருவிகளுக்கும் வரிகளைப் போட்டார் கள். அந்தவரிகளைக் கொடுமையான முறையில் வசூலும் செய்தார்கள். இதனால் விவசாயத் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது.இதர பல கிராமத் தொழில்கள் அழிந்தன. அந்த கிராமத் தொழிலாளர்களுக்கு மாற்று வேலை இல்லாமல் விவசாயத் தொழிலாளர் அணியில் குவிந்தார்கள். இதனால் நிலத்தை, விவசாயத்தை நம்பி வாழும் மக்களுடைய எண்ணிக்கை அதிகமாயிற்று, நிலத்தின் மீது மக்களுடைய அழுத்தம் அதிகமாயிற்று.

ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்த வரிக் கொடுமைகளைப் பற்றியும் அந்த வரிப்பணத்தை எப்படி அவர்கள் கொள்ளை யடித்தார்கள் என்பது பற்றியும் பல கதைகள் உண்டு.அதில் ஒன்று.

ஆங்கிலேயர் ஆட்சியின் வரிக் கொடுமைகளுக்கு சான்று. . அவர்களுடைய மாதங்களின் முதல் மாதம் ஜனவரி. ஜன்வரி என்றால் ஜனங்களுக்கு வரி என்று பொருள்:ஜனவரி மாதம் தான் நிலவரியும் இதரவரிகளும் நிர்ணயிக்கப்பட்டு விதிக்கப் படுகிறது. எனவே ஜனவரியில் ஜனங்களுக்கு வரி போடப் படுகிறது

இரண்டாவது மாதம் பிப்ரவரி. பிப்ரவரி என்றால் பிறகும் வரி என்று பொருள். அந்த மாதத்தில் தான் மடக்குவரி போடப்படுகிறது. மூன்றாவது மாதம் மார்ச் மாதம். ஜனவரி மாதம் ஜனங்களுக்கு வரிபோட்டு, பிப்ரவரி மாதம் பிறகும் வரிபோட்டு மார்ச் மாதத்தில் ஆங்கிலேயர்கள் லண்டன் மாநகருக்கு மார்ச் ஆகிவிடுகிறார்கள். ஏப்ரல் மாதத்தில் அந்த வரிப் பணத்தையெல்லாம் ஏப்பம் விட்டு விடுகிறார்கள் என்று ஆங்கிலேயர் ஆட்சியின் வரிக் கொடுமையைப்பற்றி வர்ணிக்கப் படுவதுண்டு.

இவ்வாறாக பிரிட்டிஷ் ஆட்சியின் வரிக்கொள்கை இந்திய விவசாயத்தை அழிப்புத்ாக, இந்திய விவசாயிகளைக் கொள்ளையடிப்பதாக இருந்தது.

அத்தோடு இந்திய விவசாயிகள் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் மிகவும் கடுமையான வட்டிக் கொடுன்மக்கு ஆளாக வேண்டியதாயிற்று. விவசாயிகள் எத்தனை விளைந்தாலும், விவசாய வேலைகளைத் தொடங்கும்