பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 0 கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி. .

கிராமப்புறத் தொழில்கள், கைவினைத் தொழில்கள், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியப் போட்டியின் முன் நிற்க முடி யாமல் அழிந்தன. அதனால் பல லட்சக் கணக்கான மக்கள் பஞ்சத்தால், பட்டினியால், வறுமையால் அழிந்தார்கள்

இந்திய நாட்டின் விளைநிலம் எல்லாம் சாரம் குறைந்து, வறுமையாளன் கையில் சக்தியிழந்து ஊட்டம் குறைந்து நலிந்து கொண்டிருந்தது.

இந்திய நாட்டின் நீர்நிலைகள்.-பாசனக் கால்வாய்கள், ஏரி கள், கண்மாய்கள், குளங்கள் ஊருணிகள் முதலிய எண்ணற்ற நீர் நிலைகள் எல்லாம் பராமரிப்பு இன்றி, மரா மத்து இன்றி துார்ந்து போய்ப் பாழடைந்து போயிற்று.

இந்திய நாட்டில் கோயில்கள், கலைக்கூடங்கள் எல்லாம் அழிந்து மறைந்து கொண்டிருந்தன. இந்திய மொழிகளின் தொன்மையான இலக்கியங்கள், அறிவுச் செல்வங்கள் எல்லாம் மறைந்து மங்கிக்கொண்டிருந்தன.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்திய நாட்டின் மரபு வழிக் கல்வி முறைகள் அழிந்தன. புதிய ஆங்கிலக் கல்வி என்னும் பெயரில் ஆங்கிலேய ஆட்சியின் நிர்வாகத்திற்கும் வாணிபத்திற்கும், தொழில் வர்த்தகத்திற்கும் அவசியமான ஊழியர்களை உண்டாக்கும் உற்பத்தி நிலையங்களாக சில புதிய ஆங்கிலக் கல்வி நிலையங்கள் வந்தன.

பிரிட்டிஷ் ஆட்சியின் இந்த விளைவுகளைப் பற்றித்தான்பழையனவற்றை இழந்து, புதியன எதுவும் கிடைக்காமல் இந்தியா ஒரு சோக நிலையை அடைந்துள்ளது என்று மார்க்ஸ் குறிப்பிடுகிறார்.

இந்தியா அந்நியர் ஆட்சிக்காலத்தில் தனது வனப்பை இழந்தது, வளத்தை இழந்தது, செல்வத்தை இழந்தது, அறிவுச் செல்வத்தை இழந்தது. மறுபக்கம் துக்கமும்,துக்க மும், மந்தமும், மடமையும், மூடப்பழக்க வழக்கங்களும் மேல் எழுந்தன.

இத்தனையையும் தாண்டி விடுதலைப் போராட்டத்தின் வீரமும் துணிவும் செயல் வேகமும் தோன்றின.

Yor