பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 O கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி . .

உலக முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடியின் பாதிப்புகளும், அந்நிய ஆட்சியின் கருணையில்லாத நிர்வாகத்தின் கொடுமையினால் ஏற்பட்ட பாதிப்புகளும் தேசீய விடுதலை இயக்கத்தின் புதிய இரண்டாவது கட்ட்த் தின் வேகமும் ஒத்துழையாமை, அந்நியத்துணி நிராகரிப்பு, உப்புசத்தியாக்கிரகம், கள்ளுக்கடை மறியல் முதலிய பல போராட்டங்களும் இந்திய விவசாயிகளிடத்தில் புதிய விழிப்புணர்வை உண்டாக்கின.

ஜமீன்எதிர்ப்புப்போராட்டங்கள் வெடித்தன. விவசாயி களின் கூட்டங்களும் மாநாடுகளும் பல்இடங்களில் நடை பெற்றன. விவசாயிகளும் தேசிய அளவில் ஸ்தாபன ரீதியில் ஒன்று சேரவேண்டும் என்னும் உணர்வு பலப்படத் தொடங்கியது.

தேசீயப் போராட்டத்திற்குப் பின்னர் புதிய அரசியல் சீர் திருத்தங்களுக்கான பேச்சு வார்த்தைகள் தொடங்கின. புதிய அரசியல் சட்டம் கொண்டு வருவதாக பிரிட்டிஷ் இந்திய அரசு அறிவித்தது. அந்த அரை குறையான சமஷ்டி அரசியல் சட்டம் போதாது, முழு சுதந்திரம் வேண்டும்,

பிரஜா உரிமைகள் வழங்கப்பட வேண்டும், ஜமீன்தாரி D ஒழிக்கப்படவேண்டும். விவசாயிகளுக்குக் கடன், ) நிவாரணம் கிடைக்கவேண்டும். வரிக்கொடுமைகள்

குறைக்கப்பட வேண்டும் என்னும் கோரிக்கைகள்எழுந்தன. விவசாயிகளுக்கு அகில இந்திய அளவில் ஒரு அமைப்பு வேண்டும் என்னும் முயற்சி ஏற்பட்டது.

1935-ஆம் ஆண்டில் உத்தரப்பிரதேசத்தில் பாரா பங்கி என்னுமிடத்தில் அகில இந்திய கிசான்சபா என்னும் பெயரில் அகில இந்திய விவசாயிகள் சங்கம் ஆரம்பிக்கப் பட்டது.

விவசாயிகளின் கோரிக்கைகளுக்காகவும் நாட்டின் முழு விடுதலைக்காகவும் போராடுவது அகில இந்திய விவசாயி கள் சங்கத்தின் லட்சியமாக அறிவிக்கப்பட்டது. இந்திய நாட்டின் வரலாற்றில் முதல் தடவையாக விவசாயி களுக்கு ஒரு சுயேச்சையான, தங்கள் கோரிக்கைகளைத் தொகுத்து ஸ்தாபன ரீதியான இயக்கத்தை நடத்து வதற்கான ஒரு அகில இந்திய அளவிலான அமைப்பு ஏற்பட்டது.

1936 ஆம் ஆண்டில் அகில இந்திய விவசாயிகள் சங்கம் அமைந்த பின்னர் நாட்டின் பல பகுதிகளிலும் அதன் கிளைகள் விரிவடைந்தன. ஆண்டு தோறும் பல இடங்களி லும் விவசாயிகள் சங்கத்தின் பேரவைக் கூட்டங்கள் மாநாடுகள் நடந்தன. அவைகளில் எல்லாம் நேரடியாகவே விவசாயிகள் கலந்து கொண்டார்கள். இந்த மாநாடுகள்,