பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. சீனிவாசன் 0 49

தலைவர்களுக்கும் தகராறு ஏற்பட்டு அவர் காங்கிரஸ் கட்சி பிலிருந்து பிரிந்து தனியாக சுயமரியாதை இயக்கத்தையும் பகுத்தறிவு இயக்கத்தையும் தொடங்கினார். இந்த சுய மரியாதை பகுத்தறிவு இயக்கத்தில் சிங்காரவேலு செட்டியார், ஜீவானந்தம் போன்ற கம்யூனிஸ்ட் தலைவர் கள் முழுமையாக ஆரம்பத்தில் ஒத்துழைத்தார்கள், அவர் கள் சுயமரியாதை பகுத்தறிவு இயக்கத்துடன் தொழிலாளர் கள் விவசாயிகள் பிரச்னைகள் கோரிக்கைகளையும் சோஷ லிஸ் அரசியல் பொருளாதார சமுதாயக் கருத்துக்களையும் இணைத்தார்கள். அதனால் பெரிய பனக்காரர்கள், iெர்த்தகர்கள், ஜமீன்தாரர்களின் எதிர்ப்பு, ஆங்கிலேயர் ஆட்சியின் எதிர்ப்பு ஏற்பட்டது. பெரியார் ஈ. வெ. ராமசாமி அந்த எதிர்ப்பை ஏற்க விரும்பவில்லை. அதனால் அவருக்கும் ஜீவானந்தம், சிங்காரவேலு செட்டியார் ஆகியோருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனியாகப் பிரிந்து விட்டார்

கள்.

பெரியார் ஈ.வெ. ராமசாமி அவர்கள், தமது சுத்தமான சுயமரியாதை-பகுத்தறிவுக் கருத்து பிரச்சாரப் பணிகளை மட்டும் நடத்தினார். இந்தப் பிரச்சாரத்திற்கு ஆங்கிலேய ஆட்சியின் ஆதரவும் ப்ணக்காரர்களின் ஆதரவும் தேவை என்று கருதின்ார். அதனால் அவர் 1936-37 ஆண்டுகளில் பிராமண எதிர்ப்பு என்ற பெயரால் தேர்தல்களில் ஜஸ்டிஸ் கட்சிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தார், அப்போது ஈ.வெ. ராம்சாமிக்கும் சி.என். அண்ணாதுரைக்கும் மிகவும் நெருக்கமான தொடர்பு ஏற்பட்டது.

1937 இல் நடைபெற்ற தேர்தல்களில் ஜஸ்டிஸ் கட்சி தோல்வியடைந்தது. இந்தத் தோல்வி ஜமீன்தாரர்களின் தோல்விடபிரிட்டிஷ் Tஆட்சியாளர்களின் தோல்வி என்று மக்கள் கருதினார்கள். காங்கிரஸ் கட்சியின் வெற்றியை விவசாயிகளின் வெற்றியாக, தேசீய விடுதலை இயக்கத்தின் வெறியாக மக்கள் கருதினார்கள். இந்தத் தேர்தல் வெற்றி இந்திய விவசாயிகளிடத்தில் ஒரு புதிய வேகத்தை ஏற் படுத்தியது.

1937ஆம் ஆண்டில் சென்னை மாகாணத்தில் அமைந்த காங்கிர்ஸ் மந்திரிச்பை ஒருகடன் நிவாரணச்சட்டத்தைக் கொண்டு வந்தது. இச்சட்டம் விவசாயிகளுக்கு ஒரு குறிப்பிட்ட அளவில் நிவாரணத்தைக்கொடுத்து, முதல் தடவையாக இந்தியநாட்டில் விவசாயிகள் வாங்கும் கடனுக்கு வட்டி எவ்வளவு வாங்க வேண்டும் (12.5 சதவீதம்) என்று சட்டம்வந்த்து. இதே போன்ற சட்டங்கள் காங்கிரஸ் ஆட்சி நடந்த மாநிலங்களிலும் - கொண்டு வரப்பட்டன. இதனால் காங்கிரஸ் மந்திரிசபையை விவசாயிகள்தங்களுடைய அரசு என்று கருதினார்கள்.