பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 0 கிராமப் புறப் பாட்டாளிகளை தோக்கி

விவசாயி களிடம் இருந்த உணர்வு எழுச்சியின் தாக்கமே யாகும்.

இரண்டாவது உலகயுத்த காலத்தில் பாசிச எதிர்ப்பு. சோவியத் ஆதரவுக்கருத்துக்களையும் முன்வைத்து பெரியார் தலைமையில் திராவிடர்கழகமும் யுத்தமுயற்சி களை ஆதரித்தது.

இந்தியக்கம்யூனிஸ்ட்கட்சி பாசிஸ் எதிர்ப்பு யுத்தமுயற்சிக்கு ஆதரவு தெரிவித்து மக்கள் யுத்தம் என்று அறிவித்த ப்ோதிலும் இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சி மீதிருந்ததடை நீங்கவில்லை. சிறையில் இருந்த கம்யூனிஸ்டுகள் விடுதலை செய்யப்படவில்லை. இந்தியக்கம்யூனிஸ்ட்கட்சி மீதான தடை நீக்கபபடவேண்டும என்றும் சிறையில் உள்ள கம்யூனிஸ்டுகள் விடுதலை செய்யப் ட வேண்டும் எனவும் உலகம் முழுவதிலும் இருந்த பாசிச எதிர்ப்பு சக்திகள் கிளர்ச்சி நடத்தின. பிரிட்ட னில் பிரிடிஷ்கம்யூனிஸ்ட் கட்சியினர் லேபர் கட்சியின் முற்போக்குப் பிரிவினா பிரிட்டிஷ் தொழி ரசங்கத்தினர் முதலானோர் இந்தியக் கம்யூன்சிஸ்ட் கட்சி மீதான தடையை நீக்க வேண்டும் எனக் கோரினர். இத்தகைய கிளர்ச் சி .ாரணமாக 1942 ஜூலை மாதத்தில் இந்தியக்க யூனிஸ்ட் கட்சி மீதான தடை நீங்கியது.

தடை நீக்கப்பட்டதால் விரிவான முறையில் கம்யூனிஸ்டு கள் மக்களிடம் பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டன.

1943-ஆம் ஆண்டில் தமிழ் நாட்டில் பல பகுதிகளில் இருந்த விவசாயிகள் சங்கங்களை ஒன்றுசேர்த்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அமைக்கப் பட்டது. இது அகில இந்திய கிசான் சபாவின் கிளையாகச் செயல்பட்டது.

தமிழ் நாட்டில் மாநில அளவில் விவசாய சங்க அமைப்பு ஏற்ப்ட்டதான்து, தமிழகத்தின் விவசாயிகளின் இயக்கத் திற்கு புதிய வாய்ப்புகளை உண்டாக்கியது. தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் மூலம் விவசாயிகள் இயக்கம் எல்லா மாவட்டங்களிலும் பரவியது.

தமிழ் நாட்டில் தஞ்சை இராமநாதபுரம், திருநெல்வேலி, மதுரை சேலம் தென்ஆற்காடு, திருச்சி முதலிய மாவட்டங் கள்ல் நிலச்சுவான்தாரிமுறை, ஜமீன்தாரி முறை, இனாம் தாரி முறைகளுக்கு எதிராக விவசாயிகள் இயக்கம் பரவியது.

தஞ்சை மாவட்டத்தில் பண்ணை அடிமை முறைகளை நில்ச்சுவான்தார்களின் கொடுமைகளை சமுதாய இழிவு