பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. சீனிவாசன் O 53

களை எதிர்த்து விவசாயிகள் இயக்கம் விரிவாகப் பரவியது. இராமநாதபுரம் மாவட்டத்தில் ஜமீன் இனாம் முறைகளை எதிர்த்து உழுபவனுக்கு நிலம் வேண்டும் என்னும் கோரிக்கையை முன் வைத்து விவசாயிகள் இயக்கம் பரவியது. வாரம் குத்தகைக்கு சாகுபடி செய்யும் விவசாயி கள். நியாயமான வாரம் கோரியும், நிலத்திலிருந்து வெளி யேற்றுவதை நிறுத்தக் கோரியும் பல மாவட்டங்களிலும் விவசாயிகளுடைய இயக்கம் பரவியது.

யுத்தகாலத்தில் மக்களுக்கு உணவுப் பொருள்கள் மற்றும் இதர அத்தியாவசியப் பண்டங்கள் கிடைக்கவில்லை. குறிப் பாக கிராமப்புற மக்களுக்கு மிகவும் அதிகமான கஷ்டம் ஏற் பட்டது. பல இடங்களில் பஞ்ச நிலை ஏற்பட்டது. பற்றாக் குறை அதிகமாகி விலைவாசி உயரத் தொடங்கிற்று.

வங்கத்தில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. பட்டினிச் சாவுகள் பல இடங்களில் ஏற்படத் தொடங்கின. மக்களுக்கு, உணவு தானியம், துணி, மண், எண்ணெய், முதலிய அத்தியாவசியப் பண்டங்கள் கிடைப்பதற்கு, பதுக்கல்களைத் தடுப்பதற்கு, விவசாயி சங்க ஊழியர்களும் கம்யூனிஸ்டுகளும் மிகவும் தீவிரமான முறையில் பணியாற்றினார்கள். இதனால் ப்ல மாவட்டங்களிலும் பகுதிகளிலும் விவசாய சங்க ஊழியர் களுக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் கிராமப்புற மக்களிடையே, நல்ல தொடர்பு ஏற்பட்டது. நிவாரணப் பணிகளைச் செய்யும் போதே விவசாயிகளின் பொதுவான கோரிக்கை களைப் பற்றியும் நாட்டு விடுதலையைப் பற்றியும் கிராமப் புறமக்களிடத்தில் விவசாய சங்க ஊழியர்களும் கம்யூனிஸ்டு களும் எடுத்துக் கூறிவந்தார்கள். இந்தத் தொடர்பும் பிரச் சாரமும் யுத்த முடிவில் ஏற்பட்ட எழுச்சிக்கு அனு கூலமாக அமைந்தது.

யுத்த பிற்கால எழுச்சி:

1945 ஆம் ஆண்டில் மே மாதம் இரண்டாம் உலகப் போர் முடிந்தது. ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் பாசிச அச்சு நாடு கள் முறியடிக்கப்பட்டன. நேச நாடுகள் வெற்றி பெற்றன. சோவியத்யூனியன் மகத்தான வெற்றி வாகை சூடியது. கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் போலந்து செக்கோஸ் லோவேகியா, ஹங்கேரிருமேனியா, பல்கேரியா, யுகோஸ் லாவியா, அல்பேனியா, ஜெர்மன் ஜன நாயகக் குடியரசு ஆகிய நாடுகளில் பாட்டாளி வர்க்கிங்களின் தலைமையில் தொழிலாளி விவசாயி கூட்டணியின் தலைமையில் சோஷ விஸ் அரசுகள் அமைந்தன. மங்கோலியா, வடகொரியா, சீனா, வியத்நாம் முதலிய நாடுகளில் தொழிலாளி விவசாயி சக்திகள் பெரிய வெற்றிகளைப் பெற்றுக்கொண்டிருந்தன.

ஐரோப்பாவின் பல நாடுகளிலும் தொழிலாளர்களின்