பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. சீனிவாசன் O 5 5

களை யெல்லாம் நிலப்பிரபுக்கள் அபகரித்துத் தங்களுக்குச் சொந்தமாக்கிகொண்டிருந்தார்கள். இத்தகைய அநியாய அபகரிப்புகளை எதிர்த்து விவசாயிகள் பல போராட்டங் களை நடத்தி வெற்றி பெற்றார்கள்.

அத் துடன் சமுதாய இழிவுகளை. சாதிய இழிவுகளை ஏற்றத் தாழ்வுகளை எதிர்த்து ஒன்று பட்டுப் போராடி முறி யடித்தார்கள்.

இவ்வாறு இந்திப விவசாயிகள் தங்களுடைய உரிமைகளுக் காக நடத்திய நீ ண்ட நெடுங்காலப் போராட்டங்கள் 1945 46 ஆம் ஆண்டுகளில் உச்சகட்டத்தை அடைந்து சமுதாயத் தின் இதர பகுதிகளுடன் இணைந்து, அந் நிய ஆட்சிக்கு எதிரான முழுமையான வி டு தலைப் போாாட்டமாக உயர்ந்தது.

விவசாயிகள் தொழிலாளர்கள் நடுத்தரமக்கள் படை வீரர் கள் என்று இந்திய மக்கள் போர்க்கோலம்பூண்டு, புயலாய்:

வெள்ளம்ாய்ப் புறப்படக் கண் - ஆங்கிலேயே அரசு இனி இந்தியாவை ஆள முடியாது என்னும் முடிவுக்கு வந்தது: இந்திய தேசீய காங்கிரஸ் தலைவர்களுடன் பேச்சு

வார்த்தை நடத்தி 1947 ஆகஸ்டு மாதம் 15-ம் தேதி இந்தியாவுக்குச் சுதந்திரம் வ | ங்க முன் வந்கது.

இந்தியாவின் விடுதலை என்பது சாராம்சத்தில் இந்திய விவசாயிகளின் விடுதலையாகும் 1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்தி 1ம் பெற்றது என் து இந்திய மக்களின், குறிப்பாக இந்திய விவசாயிகளின் ஜனநாயகப் புரட்சியின்

தொடக்கமாகும்.

இந்திய நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும், மன்னர்கள் ஜமின்தார்கள் முதலிய நிலப்பிரபுக்களை எதிர்த்தும், உள் நாட்டில் இருந்த சமுதாய இழிவுகளை எதிர்த்தும் நடைபெற்ற நீண்ட வீரம் செறிந்த போராட்டங்களில் இந்தியாவின் கிராமப்புறப் பாட்டாளிகள் மிகப் பெரிய பங்கை ஆற்றியுள்ளார்கள். இருப்பினும் நாடு சுதந்திரம் பெற்றதும், நாட்டின் ஆட்சி அதிகாரம் இந்திய முதலாளித்துவத்தின் கைக்கே வந்திருக் கிறது.

அந்நிய ஆட்சியிலிருந்து நாடு அரசியல் சுதந்திரம் பெற்ற பின்னர், சுதந்திரம் முழுமை பெறுவதற்கு இந்திய ஜன. நாயகப்புரட்சி முழுமை பெற வேண்டும். கிராமப்புறப் பாட்டாளிகளின் மீதுள்ள எல்லா தடைகளும் தளைகளும் முறிக்கப்பட வேண்டும். சுதந்திரத்திற்குப் பின்னர் முழுமை யான ஜன நாயகத்திற்கான போராட்டம் தொடருகிறது.