பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#

சுதந்திர இந்தியாவில், நிறைவேற்றப்பட்ட நிலச் சீர்திருத்தங்களும் கிராமப்புறங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும்

1947 ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்திய நாடு விடுதலை பெற்ற தானது இந்தியாவின் வரலாற்றில் ஒரு திருப்புமுனை பாகும்.

இந்திய சுதந்திரம் என்பது சில முதலாளித்துவ எழுத் த ளர்களும் வரலாற்று ஆசிரியர்களும் குறிப்பிடுவதைப் போல ஏதோ ஒரு சில தலைவர்கள் பேசி முடித்துக்கொண்டு வந்ததல்ல. வெறும் அகிம்சை பூர்வமான வேண்டுகோளால் மட்டும் வந்ததல்ல. கத்தி பின்றி ரத்தமின்றி எவருடைய கருணையாலும் வந்ததல்ல. அல்லது சிலர் நினைப்பது போல ஆங்கிலேய ஆட்சியாளர்கள் மனமுவந்து மாற்றி கொடுத்த ஆட்சி அதிகாரமல்ல. இந்திய சிப்பாய்களின் ஆயுதம் தாங்கிய 1857ஆம் ஆண்டுப் போராட்டத்தில் தான் இந்திய விடுதலைப் போராட்டம் தொடங்கியது.

இந்திய ராணுவம், விமானப் படை, கப்பற்படை, தரைப் படைநடத்திய வீரமிக்க ஆயுதம் தாங்கிய போராட்டத்தில்

அது நிறைவு ெபற்றது.

1857 முதல் 1947 வரை தொண்ணுாறு ஆண்டுகள் தொடர்ச்சியாகவும் விட்டுவிட்டும் இந்திய மக்கள் நடத்திய போராட்டங்களின் பலனாகவே இந்தியா விடுதலை பெற்றது.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் இந்திய விவசாயிகளின் பங்கு மகத்தானதாகும் அதன் பலனாக இந்தியா சுதந்திரம்