பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6.2 0 கிராமப்புறப் பாட் டாளிகளை நோக்கி.

கொடுமையான வாரம், இதரவகை நிலப்பிரபுத்துவ சுரண்டல் முறைக்கு ஒரு சிறு உதாரணம் கூறலாம்.

இன்றைய காமராஜர் மாவட்டம், திருவில்லிப்புத்துார் திாலுக்ா, வத்திராயிருப்பு வட்டாரம் மிகவும் செழிப்பான பள்ளத்தாக்குப் பகுதியர்கும். அதற்கு அர்ஜுனா நதிப் பள்ளத்தாக்கு என்று பெயர். -

மூன்று பக்கம் மலைகளால் சூழப்பட்ட மிகவும் ரம்மியமான ப்சுமை நிறைந்த பகுதி. மூன்று பக்கம் உள்ள மலைகளில் பெய்யும் மழை நீரெல்லாம் சிறு சிறு ஒடைகளில், காட்டாறு களில் வந்து ஒன்று சேர்ந்து அர்ஜுனா நதி என்னு பெயரில் ஒரு செழிப்புள்ன ஆறாக வருகிற்து. இந்த ஆற்றின் கிளை ஆறுகளின் தொடக்கமுதல் குறுக்கணைகள்கட் ப்பட்டிருக் கின்றன. இந்தப்பகுதியில்சுமார் நாற்பதுக்கு மேற்பட்ட பாசனக்கண்மாய்கள் உள்ளன. மிகவும்.நெருக்கமாக ஆற்றை ஒட்டிப்படிப்படியாகஒன்றன்பின்ஒன்றாகசங்கிலிக் கோர்வை போல பாசனக் கண்மாய்களும் குளங்களும் ஊருணிகளும் உள்ளன. இந்தப் பகுதியை முடுக்கு நாடு என்று மக்கள் கூறு கிறார்கள். இந்தப் பகுதியை மூவரை வென்றான் என்னும் குறு நில மன்னன் ஆண்டதாக சில வரலாற்றுச் ச ன்றுகள் குறிப்பிடுகின்றன. இது பாண்டிய நாட்டின் மதுரைப்பகுதி யாக இருந்திருக்கிறது.

பிரிட்டிஷ் ஆட்சி ஏற்பட்ட காலத்தில் திருநெல்வேலி மாவட்டம் அமைக்கப்பட்ட காலத்தில் இந்த பகுதி திருவில்லிப்புத்துார் தாலுகாவாக திருநெல்வேலி மாவட்டத் தில் சேர்க்கப்பட்டிருந்தது. பின்னர் 1910ஆம் ஆண்டில் இராமநாதபுரம் மாவட்டம் தனியாகப் பிரிக்கப்பட்ட போது இந்தப்பகுதி காரணமின்றி இராமநாதபுரம் மாவட்டத்தில் சேர்க்கப்பட்டது. இப்போது இராமநாத புரம் மாவட்டம் மூன்றாகப்பிரிக்கப் ட்டு இந்த மேற்குப் பகுதி முழுவதும் காம்ராஜர் மாவட்டமாக அறிவிக்கப் பட்டிருக்கிறது.

வத்திராயிருப்பு வட்டாரத்தில் இருந்த பெரும்பாலான கண்மாய்ப்பாசன நிலங்கள் பண்பட்ட நஞ்சை நிலங்கள். இவை வத்திராயிருப்பு, சுந்தரபாண்டியம், கோட்டையூர், மூவரை வென்றான் என்னும் கிராமங்களில் இருந்த பிராமணர் களுக்குச் சொந்தமாக இருந்தன.

மூவரைவென்றான் என்னும் குறுநில மன்னனுடைய ஆட்சி யின் கீழ் இருந்த பூமியெல்லாம் பிராமண அக்கிரகாரக் குடும்பங்களுக்கு எப்படிச்சொந்தமாயிற்று- அதுவும் நிலம் மட்டுமல்லாமல், கண்மாய்க்கரைகளும், கரைகளில் இருந்த மரங்களும், மரங்களில் கிடைக்கும் பலன்களும், கண்மாய்