பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. சீனிவாசன் () 71

மறுபக்கம் ஏற்கனவே ஜமீன் இனாம் முறைகளில் மாற்றம் பெற்று நேரடி நிலஉடமையாளர்களாக வந் துள்ளவர்கள், ரயத் துவாரி முறையில் ஏற்கனவே உள்ள நிலஉடமை யாளர்கள். ஆகியவர்களுடைய நில உற்பத்தி முறையிலும் அத்துடன் புதிதாக எழுந்துள்ள சில நவீன பண்ணைகளி லும் பசுமைப்புரட்சி என்னும் பெயரில் சில மாற்றங்கள் கொண்டு வரப் பட்டுள்ளன அ து மிகவும் முக்கியமான தாகும். அந்த விவச ய உறவுகள் தான் இன்று இந்திய விவசாயத்தில் பெரும்பகுதி ஆதிக்கத்திற்கு வந்திருக்கிறது.

முதலாவதாக, நிலவுடைமையில் சிறிய நடுத்தர, உடைமை யாளர் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது. ஆயினும் அண்மைக் காலத்தில் சில ஆண்டுகளாக, விவசாய நெருக்கடியைத் தாங்க முடியாமல் அவர்கள் தங்கள் நிலங்களை விற்பனை செய்வது அதிகமாகியுள்ளது. நகரங்களில் உள்ள சில வசதி யாளர்கள், வர்த்தகர்கள், தொழிலதிபர்கள் முதலானோர் நிலம் வாங்கியதால் முதலாளித்துவ முறையில்ான நவீன நடுத்தரப் பண்ணைகளும் நடப்பிற்கு வந்துள்ளன. அவற்றைப் பற்றிப் பின்னர் காணலாம். இருப்பினும் நில வுடமைப் பிரச்சனையில் இப்போது வரும் சில வளர்ச்சி நிலைகளை நாம் இந்த இடத்திலும் கவன்த்தில் கொள்ள வேண்டும்.

சிறிய நடுத்தர விவசாயிகளிடம் தங்களுடைய பழைய ஜமீன் இனாம் மற்றும் இதர நிலப்பிரபுத்துவ உறவு மாறி. அந்தப் பளு நீங்கி அரசுடன் நேர்டியாக உறவு கொண்ட சுதந்திர்மான நிவுைடமையாள்ர்களான போது அவர்களிடம் தொடக்கத்தில் ஒரு புதிய ஊக்கம் ஏற்பட்டது.

மேலும் நிலத்தில் இறங்கி சாகுபடி வேலைகளை நேரடி யாகச் செய்யாத பல ‘மேல் தட்டு சமுதாயங்களைச் சேர்ந்தவர்கள் பலரும் தங்களுடைய நிலங்களை விற்று விட்டு நகரங்களுக்கு உத்தியோகங்கள். நவீன தொழில்கள் போன்றவற்றிற்கும் மற்றும் வர்த்தகம் வாணிபத்திற்கும் மாறியும் உள்ளார்கள். அந்த நிலத்தை வாங்கியவர்களும் புதிய ஊக்கத் தோடும் நவீன முறை சாகுபடியில் இறங்கினார்கள். இந்த ஆரம்ப ஊக்கத்திற்கு, அரசு விவசாய உற்பத்தியை அதிகரிப்பதற்கு எடுத்த சில முயற் சிகள் உதவியாக இருந்தன.

இரண்டாவதாக, அரசு ஐந்தாண்டு திட்டங்களின் மூலம் நாடெங்கிலும் பல மாநிலங்களிலும் பெரிய அணைக்கட்டு களைக் கட்டியது. இந்த அணைக்கட்டுகள் மூலம் புதிய பாசனப் பகுதிகள் பல வந்துள்ளன.

மிது சத்தில் மூன்று வகை ப்டா ன முறை ள் ஏற்கனவே