பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. சீனிவாசன் C 81

விவசாயிகளின் கடன் சுமைகள் ஒழிக்கப்பட்டு, மீண்டும் கடன் சுமைகள் ஏறாமல் தடுக்கப்பட்டால்தான் பசுமைப் புரட்சியின் பலன் விவசாயிகளுக்குக் கிடைக்கும். அதற்கு விவசாயிகள் வாங்கும் பொருள்களின் விலைகளை நியாய விலை அளவுக்குக் குறைக்க வேண்டும். விவசாயிகளின் உற்பத்திப் பொருள்களுக்குக் கட்டுபடியாகும் விலை கிடைக்க வேண்டும். விவசாய உற்பத்திக்கு அவசியமான விசை சக்தி, கருவிகள், இதர சாதனங்கள் சீராகக் கிடைக்க வேண்டும்.

முதலாளித்துவ சுரண்டல் அமைப்பு முறை இருக்கும் வரை அது சாத்தியமில்லை. அதற்கு வேறு வழி கான வேண்டும்.

அத்துடன் பசுமைப் புரட்சியே இப்போது தனது உச்சக்

கட்டத்தை அடைந்து விட்டது. அது மேலும் முன்னோக்கிச் செல்ல முடியாது. அதனால் இனி அதிக மான அளவில் பாதக விளைவுகள்தான் ஏற்படும்.

அதுவும் ஒரு புதிய நெருக்கடிக்குள் சிக்கியிருக்கிறது.

ஒரு பக்கம் முதலாளித்துவ சுரண்டல் முறை-பாகுபாட்டு முறை காரணமாக கிராமப்புற உழைப்பு சக்திகள் வலு விழந்து வருகின்றன, கடன் சுமையில் மூழ்கி எழ முடியாமல் கிடக்கின்றன என்பது மட்டுமல்ல, பசுமைப் புரட்சியின் இதர செயல்களும் சிக்கல்பட்டிருக்கின்றன.

முதலாவதாக, மின்சார பம்பு செட்டுகள் அதிகரித் துள்ளன. நிலத்தடி நீர் அளவுக்குமேல் இறைக்கப்படு கிறது. அதனால் நிலத்தடி நீர் கீழே போய்க் கொண்டிருக்கிறது. பல கிணறுகளில் தண்ணிர் இல்லாமல் போய் விட்டது. மேலும் வற்றி வருகிறது. ஆண்டு தோறும் ஆயிரக் கணக்கில் பணம் செலவு செய்யப்பட்டு கிணறுகள் ஆழப்படுத்தப்படுகின்றன. ஆயினும் தண்ணிர் கீழே போய்க் கொண்டிருக்கிறது. இதன் காரணத்தாலும் கிணற்றுப் பாசன விவசாயிகளின் கடன்சுமை மேலும் அதிகரித்து வருகிறது.

மறுபக்கம் நிலத்தடி நீர் ஊற்றுகளைப் பாதுகாக்க எந்த நட வடிக்கையும் முயற்சியும் பசுமைப் புரட்சியில் இல்லை.

ஆறுகள், ஏரிகள், குளங்கள் இதரநீர்நிலைகள் வற்றிவிட்டன; துார்ந்து போய்க் கொண்டிருக்கின்றன. தண்ணிர் போது மான அளவில் தேக்க முடியவில்லை. நிலத்தடி நீர் ஊற்றுக் கண்கள் அடைபட்டுக் கொண்டிருக்கின்றன. தமிழகத்தைப் பொறுத்த வரையில் பல பகுதிகள் இன்னும் பத்து இருபது ஆண்டுகளில் பாலைவனமாகும் அபாயம் ஏற்பட்டிருக்

கிறது.