பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 O கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி .

சமுதாய மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும்.

நான்காவதாக, நாணய நெருக்கடி ஏற்பட்டுள்ளதைப் .ெ பாருளாதார நிபுனர்கள் குறிப் பிடுகிறார்கள். முதலாளித்துவ நாடுகளில் அநேகமாக எல்லா நாடுகளிலும் உள்ள நாணயங்களின் மதிப் பிலும் பாதிப்புகள் வந்து நெருக்கடி ஏற்பட்டிருக்கி றது. முதலாளித் துவ உலகிலேயே மிகவும் வலுவான நாணயம் என்று வலியுறுத்திக் காட்டப்படுவது அமெரிக்காவின் நாணயமான டாலர். இன்றைய உலக முழுவதிலும் எல்லா நாடுகளுக்கும் நாணயமாற்று பயன் படுவதும், சர்வதேச நாணயமாற்றுக்கு உரிய நாணயமாக முதன்மை பெற்றிருப்பதும் ஆதிக்கம் பெற்றிருப்பதும் டாலர் நாணயம்.

அந்த டாலர் நாணயமே இப்போது அடிக்கடி நெருக் கடிக் குள்ளாயிருக்கிறது. குறிப்பாக 1975-ம் ஆண்டில் வியத்நாம் போரில் அமெரிக்கா தோல்வியடைந்த பின்னர் அந்தப் போரில் ஏற்பட்ட தோல்வி அமெரிக்காவின் பொருளாதாரத்தைப் பாதித்து, அமெரிக்க நாணயமான டாலரையும் பாதித்தது. டாலர் மதிப்புக் குறைந்தது.

அத்துடன் இன்றைய முதல வரித்துவ உலகில் , வளர்ச்சி யடைந்த முதலாளித்துவ நாடுகளுக்கிடையில் கடுமையான வர்த்தகப் போட்டி-ஒருவருக்கொருவரை கழுத்தறுக்கும் போட்டி ஏற்பட்டிருக்கிறது. இந்தப் போட்டியினால் ஒருவருக்கொருவர் காலை வாரி விட்டுக் கெள்ாவதாலும் அந்த நாடுகளின் நாணயங்களின் மதிப்புகளும் பாதிக்கப் பட்டிருக்கின்றன. டாலரின் மதிப்புக் குறைந்தவுடன் இதர நாடுகளின் நாணயங்களின் மதிப்பையும் குறைத்துக் கொள்ளுமாறு அமெரிக்கா இதர நாடுகளையும், நிர்ப் பந்திக்கிறது, இத்தகைய நிர்ப்பந்தங்களினால் இதர பல நாடுகளும் தங்கள் நாணயங்களின் மதிப்பைக் குறைத்துக் கொள்கின்றன, அதனால் முதலாளித்துவ நாடுகளில் நாணய நெருக்கடி ஒரு நீராத வியாதியாகவே பரவியிருக்

கிறது.

உ .ெ தி முதலாளித்துவ அமைப்பின் ஒரு பகுதியாக இந்தியப் பொருளா தாரம் இணைந்து பிணைந்திருப்பதால் இந்திய நாணயமான ரூபாயும் பாதிக்கப்பட்டு மதிப்புக்

குறைந்து பல சமயங்களிலும் நெருக்கடிக்குள்ளாகியிருக் கிறது. அமெரிக்க டாலரின் உத்தரவின் பேரில் இந்திய நாணயத்தின் மதிப்பு குறைக்கப்பட்டிருக்கிறது. அத் துடன் உலக வர்த்தகத்தில் பணக்கார முதலாளித்துவ நாடுகள், ஏழை நாடுகளுக்குக் காட்டும் பாரபட்சம் வர்த்தக ஏற்றத்தாழ்வு காரணமாகவும் கடன் சுமைகளா லும் வளர்முக நாடுகளின் நாணயங்களின் மதிப்புகள் குறைந்து பாதிக்கப்பட்டிருக்கிறது.