பக்கம்:கிராம நூலகக் கையேடு.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

கின்றன. அந்தந்த வட்டாரத்திலுள்ள, பெரிய நூலகத்திலிருந்து நூல்களைக் கடன் வாங்கியும் கிராம நூலகம் பணிபுரியலாம். கிராமத்திலுள்ள மக்கள்தாம் கிராமநூலகத்தைப் பயன்படுத்தக் கூடியவர்கள். சில கிராமங்களில் நிலையான நூலகங்கள் உள்ளன: சில கிராமங்களில் அவ்வப்போது ஊர்தி நூலகங்கள் வந்து நூல்கள் வழங்குகின்றன. எனினும், இந்தியாவில் பெரும்பான்மையான கிராமங்கள். நிலையான நூலகமோ, ஊர்தி நூலகமோ எதுவுமே இல்லாமலிருக்கின்றன. இந்நிலையில் கிராம நூலகப் பணியை உருவாக்குவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

தவரன கருத்து

         கிராம மக்களில் பெரும்பாலோர் கல்வி அறிவில்லாதவர்களாக உள்ளனர். ஒரு சிலர் ஒரளவு கல்வியறிவுடையவர்களாக விளங்குகின்றனர். மற்றும் சிலர் கல்வி கற்க இப்பொழுது தொடங்கிபயுள்ளனர். இந்நிலைகளில் இருக்கும் கிராம மக்கள், எவ்வாறு நூல்களைப் படிக்க இயலும் என்று ஒரு சிலர் எண்ணலாம். அவ்வாறே நூலகங்கள் 'கற்றவர்களுக்காகத்தான் இயங்கி வருகின்றன என்று நம்மில் பலர் நினைக்கலாம். அது தவறான முடிவாகும். கல்வி அறிவில்லாத காரணத்தால் கலங்கித் தவிக்கும் மக்களுக்கு அக்கல்வி அறிவினை அள்ளி அள்ளி வழங்கும் தகுதியினை நூலகங்களே கொண்டுள்ளன. கல்வி அறிவில்லாத மக்களுக்கு அதனை வழங்கி, அவர்களைக் கலையுணர்வுடையவர்களாக, கற்றறிந்தவர்களாக ஆக்க வேண்டிய பொறுப்பு இன்று நூலகங்களைச் சார்ந்ததாகும். அது இன்றையச் சூழ்நிலையில் நூலகங்களின் தலையாய பணிகளில் ஒன்ருகக் கூட விளங்குகின்றது என்று கூறினும் மிகையாகாது. பொது மக்களிடையே கல்வி அறிவைப் பாப்புவதற்குரிய சிறந்த சாதனமாக இன்று நூலகம் கருதப்படுகிறது சிறப்பாக, கிராமங்களில் வாழும் மக்களை மாண்புடைய மக்களாக ஆக்கும் கல்வியறிவைப் பரப்புவதற்குரிய சிறந்த சாதனமாக இன்று நூலகம் எண்ணப்படுகிறது. அதாவது கிராம மக்களை பண்புடைய மக்களாக ஆக்கும் கல்வி நெறியை வளர்ப்பதற்குக் கிராம நூலகங்கள் பெரிதும் துணை செய்யும்.

இரண்டு முடிவுகள்

         இன்று நம்நாட்டில் பல கிராம நூலகங்கள் ஏற்கெனவே அறிவுப் பணியில் ஈடுபட்டுள்ளன. இன்னும் பல நூலகங்களை நாம் அமைக்க இருக்கின்றேம். கிராம நூலகங்களை மக்கள் நன்கு பயன்படுத்தி, நன்மைகள் பலவற்றைப் பெற வேண்டும் எனின், பின்வரும் இரண்டு பொருட்களைப் பற்றி நாம் நன்கு சிந்தித்து