பக்கம்:கிராம நூலகக் கையேடு.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11

   வேண்டும். மேலும், மக்கள் தங்களது பொது அறிவைப் பெருக்கிக் _கெள்வதற்கும் தாங்கள் ஏற்கனவே பெற்றிருக்கின்ற கல்வி அறிவை வாளர்த்துக் கொள்வதற்கும் துணை செய்ய வேண்டும். இவற்றுக்கெல்லாம் மேலாக நூல்களைப் படிப்பதன் மூலமாகத்தான் இவை அனைத்தையும் பெறமுடியும் என்ற நம்பிக்கையையும் அவைகள் மக்களுக்கு ஊட்ட வேண்டும்.
    5. மக்கள் சிரமமின்றிப் படிப்பதற்குரிய முறையில் அவைகள் பல முறையில் அச்சிடப்பட்டிருக்க வேண்டும். அத்துடன் மக்களது கண்களைக் கவரும் வண்ண அட்டைகளை அவைகள் கொண்டிருக்க வேண்டும்.
     நூலகரும், நூலகக் குழுவின் உறுப்பினர்களில் ஒரு சிலரும் நூலகத்திற்குரிய நூல்களைத் தேர்ந்தெடுக்கலாம். நூல் கண்காட்சிகள் நடப்பின் நூலகர் அவற்றிற்குச் சென்று. நூல்கள் விற்பனைக்குக் கிடைப்பின், அவற்றை நூலகத்திற்கு வாங்கி வரலாம். அவ்வாறே அருகிலிருக்கும் நகர்களுக்குச் செல்லும் போது, அந்நகர்களிலிருக்கும் _.புத்தக கடைகளுக்குச் சென்று நல்ல நூல்களை வாங்கி வரலாம். நூல்களைப் பற்றிய செய்திகளைக் கிராம மக்களில் ஒரு சிலர் தெரிந்துவைத்திருக்கலாம். அத்தகையவர்களை நூலகர் அடிக்கடிக் கலந்துகொள்ள  மிகவும் பயனுள்ளதாகும் இவற்ருேடு நூலகர் பிற நூலகங்களுக்கும் அடி .கடி சென்று நூல்களைப் பற்றிய விவரங்களே நன்கு அறிந்து கெள்ளலாம் நூல் வெளியீட்டாளர்கள் அவ்வப்பொழுது வெளியிடும் நூற்பட்டிகளும், பருவ இதழ்களிலும் நாளிதழ்களிலும் வெளியாகும் யா மதிப்புரைகளும், விளம்பரங்களும் நூல்கனைத் தேர்ந்தெடுப்பதற்கு பகுப் பெரிதும் பயன்படுவனவாகும்.
   முயவு நேரத்தில் பல நூல்களைப் படிக்கும் பழக்கம் நூலகரிடத்து கானப்படல் வேண்டும். அதன் காரணமாக அவர் படிக்கின்ற நாய்கள் எந்த அளவிற்குத் தனது வாசகர்களுக்குப் பயன்பட முடியும் _ பாக அவர் நன்கு தெரிந்து கொள்ள முடியும். அவர் இத்| திறமையைப் போற்றி நாளும் வளர்ப்பின், நல்ல நூல்கள், பயனுள்ள நாo_ள் எவை என்பதை எளிதில் தெரிந்து அவற்றைத் தனது நூலகத்திற்கு வாங்க இயலும். அடுத்து எப்பொருள்களைப் பற்றிய டி கள் கிராம நூலகத்திற்குத் தேவைப்படும் என்பது பற்றிக்

கூறுவேம்.

  பின்வரும் பொருள்களைப் பற்றிய நூல்கள் கிராம நூலகங்களுக்குத் தேவைப்படும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை .