பக்கம்:கிராம நூலகக் கையேடு.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 நூல்களை உறுப்பினர்களுக்கு வழங்குவதற்கு ஒரு பதிவேட்டை வைத்திடுதல் உதவியாக இருக்கும். இப்பதிவேட்டில் ) வழங்கிய தேதி, ii) நூலாசிரியர், நூலின் தலைப்பு. 1) நூல் வரிசை எண், iv) நூல் வாங்குபவரின் கையொப்பம், v) நூலகரின் கையொப்பம். (நூலைத் திரும்ப வாங்கும் போது போடுவதற்கு) ஆகிய பத்திகள் வகுத்திருக்க வேண்டும். நூலே வழங்க வேறு சில முறைகளும் உண்டு எடுத்துக் காட்டாக, ஒவ்வொரு உறுப்பினருக்கும் ஓர் அடையாள அட்டை கொடுத்து, நூலைக் கொடுக்கும்போது இவ்வட்டையை வாங்கிக் கொள்ளலாம். நூல் திரும்பி வரும்போது அட்டையை வாசகரிடம் கொடுத்து விடலாம் வாசகர் அட்டையில் பதிவுசெய்து கொண்டும் நூலை வழங்கலாம். நூல் வழங்குவதற்குரிய பதிவேட்டை அவ்வப்போது சரிபார்த்து, எந்தெந்த நூல்கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் திரும்பி வரவில்லை என்பதை நூலகர் அறிந்துகொள்ள வேண்டும். பிறகு, அந்த நூல்களைத் திரும்பப் பெறுவதற்குத் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராமத்தில் குறைந்த அளவு மக்களே இருப்பார்கள். அதல்ை அவ்வூரிலுள்ள உறுப்பினர்களை நூலகர் நேரடியாக அறிந்து கொள்வது எளிது. எனவே, நூலைத் திரும்பித் தராதவரிடம் நூலகர் நேரடியாகவே கேட்டு நினைவுபடுத்தி நூலை வாங்கிக் கொள்ளலாம். தாமதமாக நூலைத் திரும்பக் கொடுப்பவர்களிடமிருந்து இயன்றவரை அபராதம் வசூலிக்காமலிருத்தல் நல்லது. 5. நூல்க.ைசுப் பேணல் : நூல்களுக்கு ஏதேனும் பழுது ஏற்படுமானல், அவற்றை உடனடியாகப் பழுதுபார்த்து, நூலுக்கு மேலும் சேதம் ஏற்படாமல் தவிர்க்க வேண்டும். வாசகர்களிடம் நூல்கள் இருக்கும் போது, அ வர்கள் அந்நூல்களை எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்ற வழிமுறைகளை அவர் களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும். வாசகர்களின் கூட்டத்தைக் கூட்டி, அக்கூட்டத்தில் அவர்களுடன் இச்சிக்கல்கள் குறித்து விவாதம் நடத்தலாம். இவ்வாறு எடுக்கப்படும் முடிவுகள் பயனுள்ளவையாக அவையும். 5. துலகஉதவியாளர்கள் : நூலக உறுப்பினர்களுள் ஒத்துழைக்கும் மனப்பாங்குள்ள ஊழியர்கள் சிலரைத் த்ேர்ந்தெடுத்து, அவர்களை நூலகர் தமது பணிக்கு உதவியாக வைத்துக்கொள்ளலாம். இவ்விதம் உதவி