பக்கம்:கிராம நூலகக் கையேடு.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 | புரிவதன் மூலம், அந்த ஊழியர்களுக்குப் பயிற்சியும், சமுதாயத்திற்குச் சேவை செய்யும் மகிழ்ச்சியும் உண்டாகும். இவ்வாருக, நூலகர் தமது வேலைப்பளுவைக் குறைத்துக் கொண்டு, மற்ற முக்கியப் பணிகளில் கவனம் செலுத்தலாம். 7. வாசகருக்கு உதவி : நூலகத்தையும் நூல்களையும் பயன்படுத்துவதில் வாசகர்களுக்கு நூலகர் உதவிபுரிய வேண்டும். நூலகத்தின் எல்லா உறுப்பினர்களுடனும அவர் நெருங்கிய தொடர்பு வைத்திருக்க வேண்டும். அவர்களுக்கு நண்பராகவும், வழிகாட்டியாகவும் விளங்க வேண்டும். ஒவவொருவருக்கும் தனியாக நூல்களை வாசித்துக் காட்டி உதவலாம். நூல்களைப் பற்றியும், நடப்பு விவகாரங்கள் குறித்தும் வாசகர்சள் கேட்கும் எளிய கேள்விகளுக்கு நூலகர் விடை யளிக்க வேண்டும். இதற்குக் கிராமத்தில் தகுதியுடைய மற்றவர்களின் ஒத்துழைப்பையும் அவர் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு கேட்கப்படும் கேள்வி . களையும், அவற்றுக்கு அளிக்கப்படும் பதில்களையும் பதிவு செய்து வைத்துக் கொண்டால் உதவியாக இருக்கும். 8. பிற செயல் திட்டங்கள் : பல்வேறு வகையான செயல் திட்டங்களைக் கிராம நூலகர் வகுத்துச் செயலாக்கலாம். இச்செயல் திட்டங்கள் சுவையுடையனவாகவும், நல்லறிவூட்டுவனவாகவும் அமைதல் வேண்டும். வாசகர்களின் அடிப்படையாக அக்கறைகளைச் சுற்றிச் சுழல்வதாகவும், அவர்களுடைய சிக்கல்களுக்குத் தீர்வு காண உதவுவனவாகவும் இச்செயல் திட்டங்கள் அமைந்திருக்க வேண்டும். ஊராட்சி மன்றம், கூட்டுறவுச் சங்கம், பள்ளி போன்ற உள்ளூர் நிறுவனங்களின் ஒத்துழைப்போடு இச்செயல் திட்டங்களை நூலகர் நிறைவேற்றலாம். கிராம நூலகத்திற்குரிய சில செயல் திட்டங்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன. இவற்றுள் தகுந்தவற்றைத் தேர்ந்தெடுத்துச் செயலாக்கலாம். அ செய்தி இது ழ் படித்தல் : வாசகர்களைக் குழுவாகக் கூட்டி அவர்களுக்கு அன்ருடம் செய்தித்தாள்களை வாசித்துக் காட்டலாம். குழுவில் உள்ள ஒருவர் செய்திகளை உரக்கப் படிக்க, மற்றவர்கள் அதைக் கேட்கலாம். இவ்வாறு செய்திகளை படித்துப் பிறகு முக்கியமான சிக்கல்கள் குறித்து அக்குழுவினர் தங்களுக்குள் விவாதம் நடத்தலாம். ஆ. கதை சொல்லுகல்: வீரச் செயல்கள் பற்றிய கதைகள், புராணக் கதைகள், கிராம