பக்கம்:கிராம நூலகக் கையேடு.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 வாழ்க்கை பற்றிய கதைகள் போன்றவற்றை உறுப்பினர்களுக்கு நூலகர் சொல்லலாம்; அல்லது ஒரு விருந்தினரை அழைத்து இக்கதைகளைக் கூறும்படி செய்யலாம்; அல்லது அக்குழுவில் உள்ள ஓர் உறுப்பினரே கதைகளைக் கூறலாம். நாட்டுப்புறக் கதைகள் கிராமியச் குழ்நிலைக்கு மிகவும் சுவையுள்ளதாக இருக்கும். சுவையான கதைகள் அடங்கிய நூல்களின் பட்டியலை நூலகத்தில் காட்சிக்கு வைக்கலாம். இ. வாசகர் குழாம் : நூல்களிலும், பருவ இதழ்களிலும் காணப்படும் சுவையான செய்திகளையும், சிறந்த கருத்துக்களையும் வாசித்துக் காட்டி, வாசகர்களுக்குப் படிப்பதில் ஊக்கம் உண்டாக்கலாம். இத்திட்டத்தில் படிப்பறிவில்லாதவர்களும், குறைந்த படிப்புடையவர்களும் பங்கு கொள்ளுமாறு செய்யலாம். ச. நாடகம் : நாடகங்களை நடித்துக் காட்டுவதும், படித்துக் காட்டுவதும் கிராம மக்களுக்குச் சிறந்த பொழுது போக்காக அமையும். நாடகங்களேப் படிக்கும் பொழுது, அதில் பங்கு கொள்வோர் தங்கள் பாத்திரங்களே உரத்துப்படிக்க, மற்றவர்கள் அதைக் கேட்கலாம். இந்திய வரலாற்றின் சிறந்த பகுதிகளையும், சமயம், சமூகச் சீர்திருத்தம் பற்றிய காட்சிகளையும் நாடகமாக நடித்துக் காட்டலாம். நூலகத்திஆள்ள ஒரங்க நாடகங்களை இதற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். உ. கலந்துரையாடல் : சமுதாயச் சிக்கல்கள் பற்றிய பொருள்கள் குறித்து குழுவின. ராகக் கலந்துரையாடல்கள் நடத்தலாம். இத்தகைய கலந்துரையாடல்களுக்கு நூலகர் முன்னதாகவே திட்டம் வகுத்து, இக்குழுக்களின் தலைவர்களையும் தேர்ந்தெடுத்துவிட வேண்டும். மிகவும் கருத்து வேறுபாடுள்ள பொருள்களையும், உணர்ச்சியைத் துாண்டக்கூடிய சிக்கல்களையும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளாமலிருத்தல் நல்லது. ஊ. செய்திப் பலகை : முன்னர்க் கூறியபடி நூலகத்தில் செய்திப்பலகை ஒன்றை அமைத்து. அதில் அன்ருடம் முக்கியச் செய்திகளை எழுதிப் போடலாம். கிராமத்திலுள்ள சில பொது இடங்களிலும் இத்தகைய செய்திப் பலகைகளே வைக்கலாம். மரப்பலகை கிடைக்காவிடில், சுவரில் கருப்பு வண்ணம் பூசி அதை எழுதுவதற்குப் பயன்படுத்தலாம்.