பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தின் கதை.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா


நான்காவதாக, ஹேண்ட் இன் அல்லது ஹேண்ட் அவுட் (Handyn or Handoute) என்ற ஆட்டத்தின் மறுவடிவுதான் கிரிக்கெட் என்பதாகவும் சிலர் கூறுவார்கள்.

ஆனால் இங்கிலாந்தில் லண்டன் நகரத்தில் உள்ள அரசர்கள் நூலகத்தில் (Kings Library) இருந்த படங்களுள் ஒன்றினைக் காட்டிக் குறிப்பிட்டு, கிரிக்கெட் ஆட்டம் பற்றி கி.பி. 1344ம் ஆண்டே எழுதப் பெற்றிருக்கிறது என்று சான்று காட்டுவார்கள். அந்தத்திரை ஒவியத்தில், ஒருவர் பந்தை எறிபவராக (Bowler) நிற்க, இன்னொரு ஆட்டக்காரர் பந்தாடும் மட்டையை (Bat) கையில் வைத்துக்கொண்டு, எறிகின்ற பந்தை அடித்தாடத் தயாராக நிற்பது, பந்தாடும் மட்டையை கீழே தரையில் ஊன்றி, இப்பொழுது ஆட்டக்காரர்கள் நிற்பது போன்ற நிலையிலே நிற்பதால், அப்பொழுதே ஆட்டம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதாகவும் அமைந்திருக்கிறது என்பார்கள்.

அதனால் 1344ம் ஆண்டில் வரையப்பெற்ற திரை ஓவியத்தைக் கிரிக்கெட் ஆட்டம் பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே இங்கிலாந்தில் சிறப்பான வளர்ச்சியுற்றிருக்க வேண்டும் என்றும், அப்படி பார்த்தால், கிரிக்கெட் ஆட்டம் ஏறத்தாழ 12 அல்லது 13வது நூற்றாண்டிலே தோன்றியிருக்க வேண்டும் என்றும் அபிப்பிராயப்படுகின்றார்கள்.

சட்டம் கண்ட ஆட்டம்

இவ்வாறு பெரும் வளர்ச்சியுற்றதினாலோ என்னவோ, இந்த ஆட்டம் 1365ம் ஆண்டு அரசாள்வோருக்கு அதிருப்தியை உண்டுபண்ணும் வகையில் ஒரு பெரிய மாற்றத்தையே ஏற்படுத்தி இருந்தது. வில்வித்தைப் பயிற்சியில் மக்கள் விருப்பமுடன் ஈடுபடாமல் ஹேண்ட் இன் ஹேண்ட் அவுட்