பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தின் கதை.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிரிக்கெட் ஆட்டத்தின் கதை

17


கரடித்தோல் கையுறைகள் (Gloves) ; தங்கம் அல்லது வெள்ளி சரிகையிட்ட குல்லாய்கள்; சிறிய கால்சட்டைகள்; அல்லது கொடுக்கப்பட்ட கையில்லாத மார்புச் சட்டைகள் (Waistcoat) இவையெல்லாம் பரிசாகப் பணம் வைத்து ஆடியவை. எல்லாமே விளையாட்டுக்குத் தேவையான பொருட்களே.

ஆனால், விளையாட்டையே பந்தயப் பொருளாகவும், விளையாட்டு மைதானத்தையே சூதாட்டக் களமாகவும் மாற்றிய பெருமையும் திறமையும் அந்தப் பகுதியில் உள்ள செல்வாக்கு மிக்க செல்வந்தர்களுக்கே உரிமையாக அமைந்திருந்தது. ஆமாம்! அந்த சூதாடும் பழக்கம் அவர்களது பரம்பரை உரிமையாக, பாரம்பரியச் சொத்தாக அமைந்திருந்தது போல, அவர்கள் எப்பொழுதும் பந்தயம் கட்டியே பழகிப்போய், பைத்தியமாகத் திரிந்த நாட்களில்தான், கிரிக்கெட் அவர்கள் கையில் சிக்கிக்கொண்டது.

செல்வந்தர்கள், பிரபுக்களின் குடியில் பிறந்தவர்கள், தங்களது பொழுது போக்குக்காக ஆடி வந்த சூதாட்டங்களில் பிடிப்பிழந்து அலுத்துப் போய் இருந்த வேளையில், மாற்றாக ஒரு விளையாட்டு வேண்டுமென்று கோயில் மாடாகத் திரிந்த போதுதான் கிராமத்து மக்கள் ஆடி மகிழ்ந்த கிரிக்கெட் ஆட்டம் அவர்கள் கண்களிலே பட்டது. கருத்தினைத் தொட்டது. பிறகு, விட்டோமா பார் என்று முற்றுகையிட்டது போதாதென்று, விடாப் பிடியாகத் தங்களுடன் கடத்திக் கொண்டே போய்விட்டார்கள்.

ஆமாம்! வரலாறு அப்படித்தான் விரித்துரைக்கின்றது. கிரிக்கெட் ஆட்டம் கிளர்ச்சியூட்டும் ஆட்டமாக அவர்களுக்குத் தெரிந்தது. நெடுநேரம் ஆடுவதால், நேரம் போவதும் எளிதாக, இனிதாக இருந்தது. ஆகவே, பந்தயம் கட்டி ஆடுவதற்கும், பேரின்பமாகப் பொழுதைப் போக்குவதற்கும் கிரிக்கெட் அவர்களுக்கு வசதியாகவும் வாய்ப்பாகவும்