பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தின் கதை.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா


அமைந்துவிட்டிருந்ததால், முற்றிலுமாக, கிரிக்கெட்டைப் பயன்படுத்திக் கொள்ள அவர்கள் முற்பட்டார்கள்.

பட்டணத்திற்குப் பயணம்

பந்தயம் கட்டிக்கொண்டு, பார்த்து ரசித்துக் கொண்டு, பிரபுக் குடியினரால், பணக்கார இளைஞர்களால், எத்தனை நாள் வீல்டு கிராமத்திலே இருக்கமுடியும்? அவர்கள் அடிக்கடி இலண்டன் மாநகரம் போய் வந்ததுபோல, இந்த விளையாட்டையும் எடுத்துக்கொண்டு சென்றனர். பட்டிக்காட்டு பொழுது போக்கு ஆட்டம் பட்டணம் சென்று, பணக்காரர்களின் பாசறையிலே படம் காட்டத் தொடங்கியது.

பட்டணம் வந்த விளையாட்டு பணக்காரர்களுடனே தங்கி விட்டது. பரந்து விரிந்த இடம் விளையாடுவதற்கு பட்டிக்காட்டுப் பகுதிகளில் கிடைத்தது இயற்கைதான்.

கிராமத்தில் தான் இந்த விளையாட்டு ஆடப் பெற்றது. அதுபோல, இங்கே இலண்டன் மாநகரத்தில் எப்படி கிடைக்கும்? இங்கே பின்ஸ்பரி என்ற இடம். அதில் ஆர்டிலரி மைதானம் (Artillery Ground). செங்கற்களால் எழுப்பப்பட்ட உயர்ந்த சுவர்களால் சுற்றி வளைக்கப்பட்ட மைதானமாக அந்த இடம் இருந்தது. ஆடுகளத்தின் பெருமையை ஹோவ் (Howe) எப்படி எழுதியிருக்கிறார் பாருங்கள். "இது ஆர்டிலரி கம்பெனியாருக்கு உரிமையான இடமாகும். இந்த மைதானமும் இதனை அடுத்து இருக்கின்ற மைதானமும் பார்ப்பதற்கு அருவெறுப்பு நிறைந்த பகுதிகளாகும். சுற்றிலும் அசிங்கமானவைகள் சூழ்ந்து கிடக்க, எப்பொழுதும் துர்நாற்றம் உடையதாக விளங்கும். இதன் வழியே செல்லும் பயணிகளுக்கும் அதன் அருகாமையில் வாழ்கின்ற மக்களுக்கும் தொற்று நோயைப் பரப்புவதற்குரிய தன்மையில்,