பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தின் கதை.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிரிக்கெட் ஆட்டத்தின் கதை

21


R.S. ரெய்ட்கொ என்பவர். தன்னால் முடிந்த அளவுக்கு ஒப்பந்த விதிமுறைகளைப் பற்றி ஓர் உண்மை முடிவினை மேற்கொண்டு ஒரு நூலையும் எழுதினார். அதில் கூறியிருப்பதாவது.

1. பந்தயம் கட்டிக்கொண்டு ஆடுகின்ற ஆட்டங்களில் அச்சான விதிமுறைகள் ஏதும் இல்லாமல் இருந்தாலும், பொதுவாக பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்த விதிமுறைகள் எல்லாம், பலரால் சில சமயங்களில் பின்பற்றப்படாமல் போனாலும், அவையும் சில மாற்றங்களுடன் இடங்களுக்கு ஏற்ப மாற்றப்பட்டன. அவர்கள் விருப்பம் போல் விதிகளை ஏற்று மாற்றி ஆடினர்.

2. இந்த ஆர்டிலரி மைதானத்தில் ஆட்டம் நடைபெற்றபொழுது, கையால் எழுதித் தயாரிக்கப்பட்ட விதிமுறைகள் தாம் பெரிய பெரிய போட்டி ஆட்டங்கள் நடைபெற்ற போது பின்பற்றப்பட்டன. அதுவும் இலண்டன் மாநகருக்கு ஆட்டம் வந்தபோது, முக்கியமான விதிமுறைகள் எல்லாம், ஆர்டிலரி மைதான ஆட்டத்தில் பின்பற்றப்பட்டு வந்தவையே பெரும்பாலானவையாக அமைந்திருந்தன.

3. கிரிக்கெட் ஆட்டத்தின் மறுமலர்ச்சிக்குக் காரணமாக 1744ம் ஆண்டு ஏற்பட்ட விதிமுறைகளையே குறிப்பிடுவார்கள். அவ்வாறு ஏற்பட்ட விதிகள், 1700க்கும் 1755க்கும் இடையே பின்பற்றப்பட்ட பழைய விதிகளின் பிரதியே தவிர வேறல்ல.

ஆனால், ஹம்ப்ரோ பயன்படும் கைக்குட்டைகளில் எழுதப்பட்ட விதிகளே, முதன்முறையாக கிரிக்கெட் விதிகள் அச்சில் ஏறியவை என்றும், அதன்படியே 1752ல் வந்தது என்றும் கூறுகின்றார்கள். எனவே, ஒப்பந்த விதிமுறைகளே உண்மையான விதிமுறைகளுக்கு முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் அமைந்துவிட்டன.