பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தின் கதை.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா


இதற்கிடையிலே 1790ம் ஆண்டு பந்தயப்பணம் கட்டும் நிலையில் சற்று இறக்கம் காணத் தலைப்பட்டது. பெருந்தன்மையுள்ளவர்கள் என்று தங்களை அழைத்துக்கொண்டவர்கள், அப்படியே நடந்து கொள்ள வேண்டும் என்று தங்களுக்குள்ளே முடிவு கட்டிக்கொண்டது போல, ஒரு ஒப்பந்த நிலைக்கும் வந்தனர்.

பந்தயத்தில் தோற்றாலும் ஜெயித்தாலும் அதற்காக முணுமுணுக்கவோ, மூர்க்கத்தனமாக நடந்து கொள்ளவோ கூடாது என்பதுதான். ஏற்கனவே பந்தயம் கட்டுபவர்கள் எண்ணிக்கை குறைந்ததும், பந்தயம் கட்டி ஆடுபவர்கள் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடும் வந்ததும், பேராசைக்காரர்களிடம் பேயாட்டம் ஆடிக் கொண்டிருந்த கிரிக்கெட் ஆட்டம், பெரிய மோசடித்தனத்திலிருந்து தப்பி வெளியேறி வரமுடிந்தது.

வளர்ந்த விதம்

இவ்வாறு பந்தயம் கட்டி ஆடப்பெற்ற காலத்தில் கிரிக்கெட் ஆட்டம், கீழ்நிலைக்குப் போகாமல் என்னென்ன முறையில் வளர்ச்சி பெற்று வந்தது என்கின்ற குறிப்புகளையும் இனி காண்போம்.

1706ம் ஆண்டு, ஒரு கிரிக்கெட் ஆட்டப் போட்டியினைப் பற்றி வில்லியம் கோல்டுவின் என்பவர், இலத்தீன் மொழியிலே கவிதை ஒன்றை எழுதினார். அதுவே பல குறிப்புக்களைத் தருகின்ற குறிப்புப் பெட்டகமாக அமைந்துவிட்டது. இதைத் தொடர்ந்து பல மாகாணங்களில் மக்கள் பெருமையாக விளையாடத் தொடங்கிவிட்ட காரணத்தால், இரண்டு மாகாணங்களுக்கிடையே போட்டிகள் அதாவது கவுண்டி மேட்ச் (County Match) என்ற பெயரில்