பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தின் கதை.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிரிக்கெட் ஆட்டத்தின் கதை

27


நடைபெறலாயின. முதன் முதல் மாகாணத்திற்கிடையிலான போட்டிகள் 1709ம் ஆண்டு இலண்டன் நகரத்திற்கும் கெண்ட் மாகாணத்திற்கும் இடையே சிறப்பாக நடை பெற்று, சரித்திரத்தில் சிறப்பான இடத்தை வகித்துக் கொண்டது.

இதன் பலனாக, மாணவர்களிடையிலும் கிரிக்கெட் ஆட்டம் பிடிப்புற்று, பேரளவில் பரவிக்கொண்டது. அதன் பயனாக, பல்கலைக்கழகங்களில் கிரிக்கெட் பிரதான இடத்தையும் பிடித்துக்கொண்டது. அவ்வாறு வளர்ந்த சூழ்நிலையில் தான் 1729ம் ஆண்டு, கேம்பிரிட்ஜ் பல்கலை கழகத்திற்கும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்கும் முதல் போட்டி ஒன்று நடைபெற்றது.

இதைவிட பெரும் போட்டி ஒன்று 1744ம் ஆண்டு நடைபெற்றது. அந்த ஆண்டுதான் கிரிக்கெட் ஆட்ட மறுமலர்ச்சிக்கு வித்திட்ட பொன்னாளாகும். கென்ட் மாகாணத்திற்கும் இங்கிலாந்திலுள்ள ஆட்டக்காரர்களுக்கும் இடையே நடைபெற்ற போட்டி என்பதனால் மட்டுமல்ல, கிரிக்கெட் ஆட்டத்திற்கான புதிய விதிகளை உருவாக்கிய ஆண்டும் 1744ம் ஆண்டு தான்.

இவ்வாறு முதன் முதலாக அமைக்கப்பட்ட விதிமுறைகளை இலண்டன் சங்கம் ஏற்றுக்கொண்டு திறம்பட செயல்பட்டது. அந்த சங்கத்தின் தலைவராக இருந்து நடத்தியவர், அப்பொழுது வேல்ஸ் இளவரசராக இருந்த பிரடெரிக் லூயிஸ் என்பவர். இந்த விதிமுறைகள், மற்ற புதிய விதிமுறைகள் தோன்றிட மூல காரணமாகவும், கிரிக்கெட்டுக்கு என்று தெள்ளத் தெளிவான விதிமுறைகள் இருக்கின்றன என்று சொல்லிக் கொள்ளத் தக்க வகையிலும் தோன்றிய சில முறைகள் என்பதாகவும் விளங்கின.