பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தின் கதை.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா


வல்லவர்களாகவும் பலர் விளங்கினார்கள். அதில் ஜான் நைரன், வில்லியம் கிளார்க், டேவிட் ஹேரிஜ் என்பவர்கள் முக்கியமானவர்கள்.

ஆனால், ஹேம்பிள்டன் கிரிக்கெட் கிளப்பை சேர்ந்த சில ஆட்டக்காரர்கள் பந்தைக் கீழாகக் கொண்டு வந்து எறியும் முறையை விட்டுவிட்டு, கையை சுழற்றி எறிகின்ற (RoundArmBowling) முறையைப் பயன்படுத்தி எறிந்தார்கள். அதற்கும் பலர் எதிர்ப்பினைத் தெரிவித்தார்கள். இதுவே பெரும் பிரச்சினையாகப் பேசப்பட்டது. குழப்பங்களை உருவாக்கின. ஆட்டத்தின் சூழ்நிலையையே மாற்றுவது போல், ஆட்டக்காரர்கள் இடையே தகராறு மலையாக நிற்கவே, அப்பொழுது அதிகார பீடத்தில் இருந்த மெரிலிபோன் கிரிக்கெட் சங்கம், இதனை தீர்க்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியது.

அதன் முடிவு, 'பந்தை கை சுழற்றி எறியக்கூடாது, முன்போல கீழாகக்கொண்டு வந்தே எறியவேண்டும்.' என்பதாக அமைந்தது. 1816ம் ஆண்டு எம்.சி.சி. நிர்வாகம் இந்தத் தீர்ப்பினை வழங்கியது என்றாலும், கென்ட் மாகாணத்தைச் சேர்ந்த ஜான் வில்லிஸ் (John Willies) என்னும் ஆட்டக்காரர் தொடர்ந்து கை சுற்றி எறியும் முறையையே மேற்கொண்டு எறிந்தார். அவர் எறிந்த பந்துக்களையெல்லாம் முறையற்ற பந்தெறி (No Ball) என்றே நடுவர்கள் கூறினார்கள்.

இதனால் வெறுப்படைந்த ஜான் வில்லிஸ், ஆட்டத்தின் மீது வெறுப்படைந்தார் என்று வரலாறு கூறுகிறது. இவ்வாறு இவர் கை சுற்றி எறியும் முறையை தனது சகோதரியான கிறிஸ்டினா என்பவரிடமிருந்து கற்றுக் கொண்டாராம். (பந்தெறி முறை என்ற பகுதியில் விரிவாகக் காணலாம்.

அதாவது வீட்டில் கிரிக்கெட் பயிற்சிக்காக ஆடும் பொழுது, அவரது தங்கை இதுபோல்தான் கை சுற்றி எறிவது