பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தின் கதை.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிரிக்கெட் ஆட்டத்தின் கதை

35


இப்படியாக ஆட்டம் ஒவ்வொரு ஆட்டத்திறன்களிலும், ஆடும் முறையிலும், அடிப்படைவிதிகளிலும் மாற்றங்களும் நுணுக்கங்களும் பெற்று மறுமலர்ச்சி அடைந்து வரும் வேளையிலே, ஆங்காங்கே ஆயிரக்கணக்கான கிரிக்கெட் குழுக்கள், கழகங்கள் நாடெங்கிலும் தோன்றத் தொடங்கின.

இங்கிலாந்து முழுவதும் இவ்வாறு பெருவளர்ச்சி பெற்றதன் காரணமாக, பூரண மலர்ச்சி பெற்ற கிரிக்கெட் ஆட்டம் பிறநாடுகளுக்கும் பயணம் செய்யத் தொடங்கியது. அதனை அவ்வாறு எடுத்துச்சென்று இங்கிதமாகப் பரப்பிய பெருமையைப் பெற்றவர்கள் இராணுவ வீரர்கள், கடற்படை வீரர்கள் ஆவார்கள்.

இராணுவத்தைச் சேர்ந்தவர்களும் கடற்படை வீரர்களும், எந்த நாட்டிற்கு எந்த இடத்தில் சென்று தங்குகிறார்களோ, அந்த இடங்களில் ஓய்வு கிடைக்கும் பொழுதெல்லாம், கிரிக்கெட் ஆட்டத்தை ஆடத் தொடங்கிவிடுவார்கள். பொழுதினை இன்பமாகப் போக்கி உல்லாசம் பெறுவார்கள். அத்துடன் நில்லாமல், இரு குழுவினராகப் பிரித்துக்கொண்டு போட்டி ஆட்டமும் முனைந்துவிடுவார்கள்.

இவ்வாறு போட்டி ஆட்டத்தைப் பார்க்கும் வாய்ப்பு பெற்ற உள்ளூர்வாசிகளும் (Inhabitants), மற்ற வழிப்போக்கர்களும், இராணுவ வீரர்களுக்கு உதவி செய்கின்ற வேலையாட்களும், உதவியாளர்களும் இந்த ஆட்டத்தின் மேல் ஈடுபாடு கொள்ளத் தொடங்கினார்கள். பிறகு ஆடத் தொடங்கினார்கள். அதன் பின் ஆட்டத்துடன் ஒன்றியும் போய்விட்டார்கள்.

கப்பற்படை வீரர்களும், கலம் ஏறிப் பயணம் சென்ற மாலுமிகளும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற தேசங்களில் கிரிக்கெட் ஆட்டத்தைக் காலூன்றச் செய்த பெருமையைப் பெற்றார்கள். இராணுவ வீரர்கள் இந்தியத் துணைக்கண்டம், மற்றும் தென் அமெரிக்கா முதலிய இடங்களில்