பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தின் கதை.pdf/39

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கிரிக்கெட் ஆட்டத்தின் கதை

37


கொண்டிருந்த பயணமும் போட்டியும் என்ற நிலையில் மேலும் ஒரு புதிய எழுச்சி பிறந்தது. ஆமாம். இரண்டு நாடுகளுக்கிடையில் பெரும் போட்டி ஆட்டம் போல் நடத்தப்படவேண்டும் என்பதாக டெஸ்ட் போட்டியை (Test Match) 1877ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுடன் தொடங்கினர். முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், இரண்டாவது டெஸ்டில் இங்கிலாந்தும் வென்று இணையாகத் தங்கள் வலிமையைக் காட்டி மகிழ்ந்தனர்.

இவ்வாறு நாடுகளுக்குள்ளே நடைபெறுகின்ற டெஸ்ட் போட்டிகள் முதன் முதலாக வரலாற்றுக் குறிப்பேட்டில் பொறிக்கப்பட்டன. கிரிக்கெட் ஆட்டத்திற்கு இங்கிலாந்துதான் தாயகம் என்பதால், இங்கிலாந்தில் இருந்துதான் டெஸ்ட் போட்டிக்காகப் புறப்பாடு முதலில் நடந்தது.

மேற்கிந்தியத் தீவினருடன் முதல் டெஸ்ட் போட்டியானது 1928ம் ஆண்டு இங்கிலாந்தில் தொடங்கி, நடைபெற்றது.

நியுசிலாந்துடன் முதல் டெஸ்ட் பந்தயம் 1929ம் ஆண்டும், இந்தியாவுடன் முதல் டெஸ்ட் போட்டி 1932ம் ஆண்டும், பாகிஸ்தானுடன் முதல் டெஸ்ட் போட்டி 1954ம் ஆண்டும் நடைபெற்றது. இவ்வாறாக, உலக நாடுகளுக்கிடையே டெஸ்ட் போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வரலாயின. வருகின்றன.

இங்கிலாந்து நாட்டின் ஆளுகைக்கு உட்பட்ட நாடுகளில்தான் கிரிக்கெட் ஆட்டம் முதலில் பரவ ஆரம்பித்தது. காமன்வெல்த் நாடுகள் என்று அவை அழைக்கப்பட்டன. முதலில் இங்கிலாந்து நாட்டின் எம்.சி.சியின் அரவணைப்பில் இருந்த கிரிக்கெட், 1909-ம் ஆண்டிலிருந்து புதிய அமைப்பின் கீழ் வளரத் தொடங்கியது.

அகில உலகக் கிரிக்கெட் சங்கம் என்பதாக இங்கிலாந்தில் 1909ம் ஆண்டு இம்பீரியல் கிரிக்கெட் கான்பரன்ஸ் ஒன்றைத் தொடங்கினர். அதில் முதலில் மூன்று நாடுகள்