பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தின் கதை.pdf/40

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா


அங்கம் வகித்தன. அவை இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்காவாகும். அதன்பின் 1926ம் ஆண்டு இந்தியா, நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் அங்கத்தினர்களாக சேர்த்துக் கொள்ளப்பட்டனர். 1952ம் ஆண்டு பாகிஸ்தான் நாடு அங்கத்தினராக இணைக்கப்பட்டது.

இம்பீரியல் கிரிக்கெட் கான்பரன்ஸ் என்ற அமைப்பில் இருந்த நிலையை மாற்றிக்கொள்ள அங்கத்தினர்கள் விரும்பினர். முனைந்தனர். அத்துடன், காமன்வெல்த் நாடுகளுக்கு அப்பால் உள்ள நாடுகளையும் இணைத்து ஆடவேண்டும் என்ற எண்ணத்தின் காரணமாக, அந்த அமைப்புக்கு 1965ம் ஆண்டு இண்டர் நேஷனல் கிரிக்கெட் கான்பரன்ஸ் என்று பெயர் மாற்றினர்.

அதன் விளைவாக காமன்வெல்த்தை சேராத பிறநாடுகளான அமெரிக்கா, ஹாலந்து, டென்மார்க்கு, தென் ஆப்பிரிக்கா, ஹாங்காங், ஜிப்ரால்டர், நியூஜினியா, ஸ்ரீலங்கா போன்ற நாடுகளும் அங்கத்தினர்களாகும் வாய்ப்புக்களைப் பெற்றன.

1930ம் ஆண்டு, இங்கிலாந்துக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் நடைபெற்ற போட்டியானது, நான்கு நாட்களாக இருந்தன. 1963ம் ஆண்டு குறிப்பிட்ட பந்தெறித்தவணை (Limited Overbasis) ஆட்டம் வேண்டும் என்று ஆரம்பித்து அதற்கான கில்லர் கிரிக்கெட் கோப்பை ஒன்றையும் ஏற்படுத்தினர். அதுபோலவே 1975ம் ஆண்டு உலகக் கோப்பைக்கான (World Cup) குறிப்பிட்ட பந்தெறித்தவணைப் போட்டியும் தொடங்கி நடத்தப் பெற்றது.

இந்தியாவில்..ரஞ்சிக் கோப்பை (Ranji Trophy)
நியூசிலாந்தில்...பிளங்கட் கேடயம் (Plunket Shield)
ஆஸ்திரேலியாவில்..ஷெபீல்டு கேடயம் (Shefield Shield)