பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தின் கதை.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிரிக்கெட் ஆட்டத்தின் கதை

43


கோப்பைதான் பரிசாகத் தரப்படுகிறது. மிகவும் கெளரவம் வாய்ந்த இப்பரிசினைப் பெற, ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு ஆண்டும் முயல்கிறது. அதனால் கிரிக்கெட் ஆட்டம் பேரளவில் வளர்ச்சியடைகிறது. மக்களிடையே உன்னத நிலையை எய்திடும் வண்ணம் உயர்நிலையையும் ஆட்டக்காரர்களுக்கு அளிக்கிறது.

இந்தியாவிலே கிரிக்கெட் வளர்ந்திருக்கும் நிலையினைப் பார்த்தால், நமது தேசிய ஆட்டமாக விளங்குகிற வளைகோல் பந்தாட்டத்தைவிட, ஒருபடி மேலே சென்று, உலக அரங்கிலே உன்னத இடத்தை வகிக்கும் பெருமையுடன் விளங்குகின்றது. உண்மையிலேயே மிகவும் பிரசித்திப் பெற்ற ஆட்டமாகத்தான் கிரிக்கெட் இன்று விளங்குகிறது.

ரஞ்சிக்கோப்பைக்கான போட்டியைப் போலவே, வேறு பல முதல்தரமான போட்டிகளும் ஒவ்வொரு புகழ் பெற்ற கோப்பைக்காகப் போட்டியிடும் வகையிலே சிறப்புப் பெற்றுத் திகழ்கின்றது.

துலிப்கேடயம் (Duleep Trophy): இரானி கேடயம் (Irani Trophy); டியோதர் கேடயம் (Deodhar Trophy), போன்றவை முக்கிய போட்டிகளுக்கான கேடயங்களாகும்.

அதுபோலவே கூர்பிகார் கேடயம் (Cooch-behar Trophy), சி.கே.நாயுடு கேடயம் (C.K. Nayudu Trophy) ரோகிண்டன் பாரியர் கேடயம் (Rohinton Baria Trophy) விஸ்ஸி கேடயம் (Vizzy Trophy) போன்ற கேடயங்கள் பள்ளிகளுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் இடையே நடைபெறும் போட்டி ஆட்டங்களுக்குரிய கேடயங்களாகப் பரிசளிக்கப்படுகின்றன.

கிரிக்கெட் ஆட்டம் ஒரு தனித்தன்மை வாய்ந்த ஆட்டமாகும். மிகவும் அமைதி வாய்ந்த, கொந்தளிப்பற்ற, கோலாகலமாக நடைபெறுகின்ற, பண்பாட்டை வளர்க்கின்ற